ஷுட்டிங்கில் வீசப்பட்ட நிஜ வாள்.. நெற்றியில் 15 தையல்.. நடிகையின் போட்டோவை பார்த்து பதறிய ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை கங்கனா ரனாவத் நெற்றியில் வெட்டுக் காயத்துடன் ஷேர் செய்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.

நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் சினிமாவில் வெற்றிகரமான ஒரு நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசம் குறித்து பேசி வரும் கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டு வருகிறார்.

நெற்றியில் வெட்டுக்காயம்

நெற்றியில் வெட்டுக்காயம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை கங்கனா ரனாவத், அவ்வப்போது சில நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் கங்கனா. அதில் நெற்றியில் வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்ட காண்போரை பதற வைத்துள்ளார்.

லீடிங் ரோலில்..

லீடிங் ரோலில்..

இந்த போட்டோ மணிகர்ணிக்கா ஷுட்டிங்கின் போது நடந்த விபத்தில் எடுக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் மணிகர்ணிக்கா. இந்தப் படத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் கங்கனா ரனாவத். மேலும் லீடிங் ரோலிலும் நடித்தார்.

நெற்றியை பதம் பார்த்து

நெற்றியை பதம் பார்த்து

இந்தப் படத்தின் ஷுட்டிங் கடந்த 2017ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஒரு மாத வாள் சண்டை பயிற்சிக்கு பிறகு வாள் சண்டை காட்சியாக்கப்பட்டது. அப்போது நடிகர் நிஹார் பாண்டியா வீசிய நிஜ வாள் நடிகை கங்கனாவின் நெற்றியை பதம் பார்த்தது.

அப்படியே நடித்தார்

அப்படியே நடித்தார்

நெற்றியில் பட்ட அந்த காயத்திற்கு உடனடியாக சிகிச்சை பெற்றார் கங்கனா ரனாவத். மேலும் அந்த காயத்திற்கு 15 தையல் போடப்பட்டது. அப்போதே அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருப்பினும் காயமடைந்த பிறகும் படத்தில் இயற்கையாக இருக்கும் என அப்படியே பங்கேற்றார்.

பதறிய ஃபேன்ஸ்

பதறிய ஃபேன்ஸ்

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கங்கனா ரானவத். அதனை பார்த்த ரசிகர்கள் இப்போது நடந்துவிட்டதோ என பதறிவிட்டனர். அதேநேரத்தில் பல பிரபலங்கள் அவரது டெடிகேஷனை பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X