டியர் விஜய்.. நீங்கள் மனிதல் அல்ல கடவுள்.. ஐ மிஸ் யூ.. நடிகை கங்கனா ரனாவத் உருக்கம்!
சென்னை: நடிகை கங்கனா ரனாவத் இயக்குநர் ஏஎல் விஜயை புகழ்ந்து டிவிட்டியிருக்கும் டிவிட் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்து வருகிறார் கங்கனா.

பெரும் வைரல்
இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவர்களின் கேரக்டர் போட்டோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

டப்பிங் பணிகள்
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவி படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது பாதி
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, டியர் விஜய் சார், தலைவி படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்துவிட்டது. இரண்டாவது பாதி மட்டுமே மீதமுள்ளது. இந்த பயணம் முடிவுக்கு வருகிறது.

பிரகாசமாக பிரகாசிக்கும்..
உங்களைப் பற்றி நான் கவனித்த முதல் விஷயம் என்னவென்றால், டீ, காபி, ஒயின், நான் வெஜ், உள்ளிட்டவை உங்களை நெருங்க முடியாத கட்சிகள் என்று நீங்கள் சொன்னீர்கள், பின்னர் மெதுவாக நீங்கள் ஒருபோதும் தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தேன், நீங்கள் அதிசயமான திறமையானவர் மட்டுமல்ல, ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக நான் சிறந்து விளங்கும் போது உங்கள் கண்கள் பிரகாசமாக பிரகாசிக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் கோபம், பாதுகாப்பின்மை அல்லது விரக்தியின் ஒரு குறிப்பை நான் பார்த்ததில்லை, பல தசாப்தங்களாக உங்களை அறிந்தவர்களிடம் பேசினேன், அவர்கள் உங்களைப் பற்றி பேசும்போது அவர்களின் கண்கள் ஒளிரும், நீங்கள் ஒரு மனிதர் அல்ல, நீங்கள் ஒரு கடவுள், நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என் இதயத்தின் அடி நாதத்திலிருந்து.. மேலும் நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. இவ்வாறு நடிகை கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











