Kangana: சந்திரமுகி 2 படத்தோட சான்சை நான் தான் வாசு சார்கிட்ட கேட்டு வாங்கினேன்..கங்கணா வெளிப்படை!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மஹிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.
இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005ம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் வெளியான நிலையில், தற்போது 18 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார். படம் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
சந்திரமுகி 2 பட வாய்ப்பை நான்தான் கேட்டு வாங்கினேன் என கங்கணா வெளிப்படை: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்த சந்திரமுகி படத்தை பி வாசு இயக்கியிருந்தார். மலையாள படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப் படத்தை தமிழ் மற்றும் ரஜினி ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் எடுத்திருந்தார் பி வாசு. படம் நினைத்ததை காட்டிலும் மிகவும் அதிகமான வரவேற்பை பெற்றது.

படத்தின் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்தப் படத்தில் ரஜினி படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்திருந்தார் பி வாசு. ரஜினியின் படமாகவே வெளியான போதிலும், படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ரஜினி -வடிவேலு காமெடி படத்தில் பிரதானமான கவனத்தை பெற்ற நிலையில், ஜோதிகாவின் நடிப்பையும் குறிப்பிட்டு கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜோவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் வரும் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டில் படத்தின் நடிகர், நடிகைகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்தப் படத்தின் ரிலீசையொட்டி படக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் நாயகி கங்கணா ரனாவத் பல்வேறு மீடியாக்களில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னிடம் மற்றொரு கதை குறித்து பேச வந்த பி வாசுவிடம், அந்தக் கதைகள் தன்னை இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்தப் படங்களை செய்யலாம் என்று கூறியதாகவும் ஆனால் தற்போது இயக்க திட்டமிட்டுள்ள சந்திரமுகி 2 படத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியதாகவும் கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு பி வாசு ஆச்சர்யப்பட்டு, சந்திரமுகி 2 படத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என கேட்டதாகவும் தொடர்ந்து இந்தப் படத்தின் லீட் கேரக்டரில் நடிக்க வாய்ப்பை அளித்ததாகவும் கங்கணா பெருமையாக குறிப்பிட்டுள்ளார். வரும் 15ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நாளைய தினம் ஈஏ மாலில் நடைபெறவுள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ராதிகா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











