'உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுக்க சொன்னார்'... பிரபல இயக்குனர் மீது நடிகை கங்கனா பரபரப்பு புகார்!

பிரபல இயக்குனர் மீது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: உள்ளாடை இல்லாமல் தன்னை போஸ் கொடுக்க, பிரபல இயக்குனர் வற்புறுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

'தாம் தூம்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். அதன் பிறகு ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி அவர், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் வெளியாகும்.

உள்ளாடை இல்லாமல்

உள்ளாடை இல்லாமல்

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாலஜ் நிலானி குறித்து கங்கனா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 'ஐ லவ் யூ பாஸ்' எனும் படத்தில் நடித்த போது, உள்ளாடை போடாமல் தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குனர் நிலானி வற்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் 'ஐ லவ் யூ பாஸ்' ஒரு வகையான ஆபாச படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிகாரியுடன் உடலுறவு

மேலதிகாரியுடன் உடலுறவு

'ஐ லவ் யூ பாஸ்' படத்தில், நடுத்தர வயதுடைய அலுவலக மேலதிகாரியுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் இளம்பெண் கதாபாத்திரம் தனக்கு தரப்பட்டதாக கங்கனா கூறியுள்ளார். எனவே தனக்கு ஏற்ற படம் இல்லை என்பதால், அதில் தான் நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலானி மறுப்பு

நிலானி மறுப்பு

ஆனால் கங்கனாவின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இயக்குனர் நிலானி. 'ஐ லவ் யூ பாஸ்' ஆபாச படம் இல்லை என்றும், அமிபாத், ரிஷி கபூர் ஆகியோரை இந்த படத்தில் நடிக்க கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட புகைப்படம் வெளியான பிறகு தான் கங்கனாவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவும் புகைப்படம்

வேகமாக பரவும் புகைப்படம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, இயக்குனர் நிலானி குறித்து தெரிவித்துள்ள கருத்து, இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X