Kani Kusruti: 'தி கேரளா ஸ்டோரி' இயக்குநர் பட வாய்ப்பை நிராகரித்த கனி குஸ்ருதி.. என்ன காரணம்?

சென்னை: கேரளாவில் அதிகமான கவனத்தை பெற்ற படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிக சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றது. பல இடங்களில் இந்தப் படத்திற்கு திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற All we imagine as light படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி தி கேரளா ஸ்டோரி பட இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்து முடிந்துள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் இஸ் லைட் என்ற படம் கிரான்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. இந்த நிகழ்ச்சியில் பாயல் கபாடியாவுடன் இணைந்து பங்கேற்றிருந்தார் கனி குஸ்ருதி. இவர் இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிடித்திருந்த தர்பூசணி கிளட்ச் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

Kani kusruti

நடிகை கனி குஸ்ருதி: சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து முடிந்துள்ளது. இதில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருதினை வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி, பாயல் கபாடியாவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் அவரது தர்பூசணி கிளட்ச், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இதன்மூலம அதிகமான சர்ச்சைகளை கனி குஸ்ருதி பெற்றிருந்தார். இந்தப் படத்தின்மூலம் சர்வதேச அளவில் இந்திய சினிமா மீது உலக திரைப்பட ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

கிராண்ட் பிரிக்ஸ் விருது: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாயல் கபாடியா மற்றும் கனி குஸ்ருதி இருவரும் மலையாள சினிமா துறையை பாராட்டி பேசியிருந்தனர். இந்தியாவில் பல நல்ல படங்கள் வெளியாவதை சுட்டிக்காட்டியுள்ள இவர்கள், மலையாள சினிமா துறையில் வெளியாகும் படங்கள் அதிகமான கவனத்தை பெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மலையாள படங்களின் கதைகள் அனைத்துமே தனித்துவமானவை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். மலையாளத்தில் வெகுஜன படங்கள் மட்டும் இல்லாமல் கலைப்படங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

கனி குஸ்ருதி பேட்டி: இந்நிலையில் தற்போது கேன்ஸ் விழாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார் கனி குஸ்ருதி, முன்னதாக பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்து அதிகமான கவனத்தை பெற்றுள்ள இவர், தி கேரளா ஸ்டோரி இயக்குனர் சுதிப்டோ சென்னின் அடுத்த படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்க தனக்கு கிடைத்த வாய்ப்பை தான் மறுத்து விட்டதாக கூறியுள்ளார். தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு எதிரான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடிக்க தான் எப்போதுமே விரும்புவதில்லை என்றும் கனி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட நடிகைகள் லீட் கேரக்டர்களில் நடித்து தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.

தி கேரளா ஸ்டோரி படம்: இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களுடன் தி கேரளா ஸ்டோரி படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டதாக இந்தப் படத்தில் காணப்பட்டது. மேலும் அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் காட்டப்பட்டது. அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட இந்த பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தின் கதைக்களம் காணப்பட்டது. படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாகியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பட வாய்ப்பை மறுத்த கனி: தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென், பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து பெற்றார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாவதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில், சுதிப்தோ சென்னின் பட வாய்ப்பை மறுத்துள்ள கனி குஸ்ருதி, தனக்கு பிடிக்காத கேரக்டர்களை நிராகரிக்க தனக்கு தற்போது அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிரான கதைக்களம் என்று விமர்சிக்கப்பட்ட பிரியாணி படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியாணி படம் குறித்து கனி: பிரியாணி பட வாய்ப்பு கிடைத்த நேரத்தில் தன்னிடம் 3000 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் அப்போது பிரியாணி படத்தில் நடிக்க 70,000 ரூபாய் தனக்கு கிடைத்ததாகவும் அந்த நேரத்தில் அது மிகப்பெரிய தொகை என்றும் அவர் கூறியுள்ளார். பிரியாணி படம் கனிக்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. இதே போன்ற விமர்சனங்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே தற்போது அவர் தி கேரளா ஸ்டோரி பட இயக்குநரின் பட வாய்ப்பை மறுத்துள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X