டிரெஸ மாத்தி மாத்தி போட்டு அம்மாவும் மகனும் போட்ட ஆட்டத்த பாருங்க.. வைரலாகும் நடிகையின் வீடியோ!
சென்னை: பிரபல நடிகையும் அவரது மகனும் தங்களின் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை கனிகா 2002ஆம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து எதிரி, வரலாறு, ஆட்டோகிராப், டான்சர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும் மலையாளத்தில் கொடி கட்டி பறந்தார் கனிகா. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கனிகா.
தமிழில் கடைசியாக யாதும் ஊரே யாவரும் கேளீர், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷியாம் ராதா கிருஷ்ணன் என்பவரை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் கனிகா.
கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் கனிகா, தற்போது மகனுடன் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோ வைரலாகியுள்ளது.
அதாவது தனது மகனின் உடையை தானும் தன்னுடைய உடையை தனது மகனும் அணிந்து கொண்டு செம ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். கனிகா தனது மகனுடன் டான்ஸ் ஆடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











