சோகமாய் இருந்த மகன்.. ஜாலியாக்க அஜித் பட நடிகை செய்த 'சம்பவத்த' பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: பிரபல நடிகையான கனிகா சோகமாய் இருந்த தனது மகனை ஜாலியாக்க செய்த 'சம்பவம்' வைரலாகி வருகிறது.

Recommended Video

டிரெஸ மாத்தி மாத்தி போட்டு அம்மாவும் மகனும் போடுற ஆட்டத்த பாருங்க! - வீடியோ

நடிகை கனிகா 2002ஆம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து எதிரி, வரலாறு, ஆட்டோகிராப், டான்சர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில் கடைசியாக ஓ காதல் கண்மணி படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார். தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

2008ல் திருமணம்

2008ல் திருமணம்

தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும் மலையாளத்தில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கனிகா. இந்நிலையில் ஷியாம் ராதா கிருஷ்ணன் என்பவரை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் கனிகா.

சாய் ரிஷி

சாய் ரிஷி

கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது மகனுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனின் உடையை கனிகாவும் கனிகாவின் உடையை மகனும் உடுத்தி செம ஆட்டம் போட்டனர்.

இன்ஸ்டா பக்கத்தில்..

இன்ஸ்டா பக்கத்தில்..

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் மகனுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் குட்டி டிராயர் அணிந்துள்ள கனிகா, மகனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மகன் சோகமாக இருந்தான்

மகன் சோகமாக இருந்தான்

ஏஆர் ரஹ்மானின் இந்தி பாடலுக்கு அம்மாவும் பிள்ளையும் அப்படி ஒரு ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவுக்கு, அன்பும் அரவணைப்பும் சரிசெய்ய முடியாதது எதுவுமில்லை. இன்று காலை என் சின்ன பையன் வருத்தப்படுவதைக் கண்டபோது, அவரை பிரகாசமாக்க செய்தேன் என தெரிவித்துள்ளார்.

பாஸிட்டிவிட்டி

பாஸிட்டிவிட்டி

அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் ஒரு நல்ல நடிகை மட்டுமல்ல நல்ல தாயும்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என பாராட்டியுள்ளனர். மேலும் சிலர் நீங்கள் இருக்கும் இடத்தில் பாஸிட்டிவிட்டியை பரவ விட்டு விடுகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.

ரொம்ப ஸ்வீட்

இன்னும் சிலர், நீங்கள் ரொம்பவே ஸ்வீட்டான மற்றும் க்யூட்டான அம்மா என்றும் புகழ்ந்துள்ளனர். கனிகாவின் இந்த கலக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X