“என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க”.. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ!

நடிகை கனிகா அவரது கணவருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

Actress kaniha Gym workout video

சென்னை: நடிகை கனிகாவின் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கனிகா. முதலில் குடும்பப் பாங்கான ரோல்களில் மட்டுமே நடித்து வந்த அவர், பிறகு கிளாமருக்கு தாவினார். இருப்பினும் அவரால் சினிமாவில் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

பின்னர் திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாகிவிட்டார். தற்போது அவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இருந்தாலும் உடம்பை கட்டுப்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கனிகா உறுதியாக இருக்கிறார்.

உடற்பயிற்சி வீடியோ

உடற்பயிற்சி வீடியோ

தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை கனிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிடுவது வழக்கம் தான். ஆனால் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ அனைவரையும் அசரவைத்துள்ளது.

கபுள் ஒர்க்கவுட் சேலஞ்சு

கபுள் ஒர்க்கவுட் சேலஞ்சு

கபுள் ஒர்க்கவுட் சவால் (#couple workout challenge) எனும் ஹேஷ்டேகில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில், கனிகாவின் கணவர் தரையில் படுத்தப்படி, அவரை தூக்கி பிடித்திருக்கிறார். கனிகாவின் இருகால்களை அவரது கணவர் பற்றியிருக்க, கனிகாவோ அந்தரத்தில் இருக்கும் கணவரின் கால்களை பிடித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து ஒருசேர கை, கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்திகின்றனர்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து, கனிகாவையும், அவரது கணவரையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றன. நிறைய பேர் இதனை லைக் செய்துள்ளனர்.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

இப்போது எல்லாம் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு சவால் வந்துகொண்டே இருக்கிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்சில் ஆரம்பித்து, இப்போது கபுள் ஒர்க்கவுட் வரை வந்துள்ளது. இன்னும் என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டி வருமோ என நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X