தூக்கத்திலேயே போயிடணும்னு சொன்னாரு.. அதே மாறி போயிட்டாரு.. பிரதாப் போத்தன் மறைவு.. கனிகா உருக்கம்!
சென்னை: நடிகர் பிரதாப் போத்தனின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார் நடிகை கனிகா.
Recommended Video
ஃபைவ் ஸ்டார், எதிரி, வரலாறு உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா, மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மம்மூட்டியின் சிபிஐ 5 தி பிரைன் படத்தில் பிரதாப் போத்தனின் மனைவியாக நடித்த கனிகா நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு உருக்கமாக பேசியது ரசிகர்களை நெஞ்சடைக்க செய்துள்ளது.

கமல் இரங்கல்
"தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி." என நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி இரங்கல்
மலையாள நடிகர் பிருத்விராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் மறைந்த மூத்த நடிகர் பிரதாப் போத்தனுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், தமிழில் கடைசியாக விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் பிரதாப் போத்தன் நடித்திருந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், Rest in Peace Sir என இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேரில் சென்று அஞ்சலி
இயக்குநர் மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்ட திரை ஆளுமைகள் நடிகர் பிரதாப் போத்தனின் வீட்டிற்கே சென்று நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். மலையாள திரையுலகின் சார்பாக நடிகை கனிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் பிரதாப் போத்தன் மறைவு செய்தி அறிந்ததும் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

தூக்கத்திலேயே போயிடணும்னு சொல்வார்
ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப், எதிரி, வரலாறு, யாதும் ஊரே யாவரும் கேளீர், கோப்ரா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா நடிகர் பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், மரணம் பற்றி அவர் பேசும் போது, நிம்மதியா தூக்கத்திலேயே.. உயிர் போயிடணும்னு சொல்வார்.. அப்படியே இன்று மறைந்து விட்டார் என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

மனைவியாக நடித்துள்ளார்
இயக்குநர் மாது இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சிபிஐ 5 தி பிரைன் படத்தில் நடிகர் பிரதாப்புக்கு மனைவியாக சூசன் ஜார்ஜ் எனும் கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்திருப்பார். பிரதாப் போத்தன் உடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள அவர், மலையாள திரையுலக சார்பாக வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











