விஜய் சேதுபதி மனசுக்கு.. நல்லா இருக்கனும்.. மார்க்கெட் இழந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தல்!

ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவருக்கு தற்போது நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்,

சென்னை: ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவருக்கு தற்போது நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்,

கேரளாவை சேர்ந்த பிரபலமான நடிகை கனிகா நிறைய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். முக்கியமாக இவர் நடித்த ஆட்டோகிராப், பைவ் ஸ்டார், வரலாறு படங்கள் தமிழில் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பின் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மலையாள படங்களில் கனிகா கவனம் செலுத்த தொடங்கினார். 2 வருடங்கள் முன்பு வரை மலையாள படங்களில் நன்றாக நடித்து வந்தார்.

மார்க்கெட் இல்லை

மார்க்கெட் இல்லை

அதன்பின் இவருக்கு மலையாள படங்களிலும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மலையாளத்தில் புது அலை இயக்குனர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களின் படத்தில் பெரும்பாலும் புது முகங்கள் மட்டுமே நடிப்பதால் முன்னாள் நடிகை கனிகாவின் வாய்ப்பு குறைய தொடங்கியது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கனிகாவிற்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கனிகா தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.

என்ன படம்

என்ன படம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ன ரோஹந்த் என்ற இளம் இயக்குனரின் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதன் 50% ஷூட்டிங் கொடைக்கானலில் முடிந்துள்ளது.

சென்னை ஷூட்டிங்

சென்னை ஷூட்டிங்

படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் சென்னையில் நடக்க உள்ளது. கொடைக்கானலில் நடந்த ஷூட்டிங்கில் கனிகா கலந்து கொண்டார். ஆனால் இவருக்கு படத்தில் என்ன ரோல் என்று விவரம் இன்னும் வெளியாகவில்லை.

கேட்டார்

கேட்டார்

விஜய் சேதுபதி கனிகாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று இயக்குனரிடம் கூறி அழைத்து வந்துள்ளார். படத்தில் அவருக்கு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த கூடிய பாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். விஜய் சேதுபதியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X