என்னங்க இது.. இப்படிலாம் போட்டோ போடாதீங்க.. கவர்ச்சியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கனிகா!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.

சென்னை: நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.

நடிகை கனிகா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் பல்வேறு உடல் பிரச்சனைகள், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் சில நாட்கள் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிட்டு மீண்டும் தீவிரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார் கனிகா.

என்ன படம்

கேரளாவை சேர்ந்த பிரபலமான நடிகை கனிகா நிறைய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். முக்கியமாக இவர் நடித்த ஆட்டோகிராப், பைவ் ஸ்டார், வரலாறு படங்கள் தமிழில் பெரிய வரவேற்பை பெற்றது.அதன்பின் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மலையாள படங்களில் கனிகா கவனம் செலுத்த தொடங்கினார்.

என்ன இல்லை

என்ன இல்லை

2 வருடங்கள் முன்பு வரை மலையாள படங்களில் நன்றாக நடித்து வந்தார். அதன்பின் இவருக்கு மலையாள படங்களிலும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கனிகாவிற்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

என்ன போட்டோ

என்ன போட்டோ

இதனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கனிகா தமிழ் படங்களில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கனிகா கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பிகினியில் இருக்கும் அந்த புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.

கடவுளே

கடவுளே

நீச்சல் குளத்தில் அவர் கருப்பு நிற பிகினியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி இருக்கும் அவர் வாய்ப்பிற்காக இப்படி செய்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கிண்டல்

கிண்டல்

அதே சமயம் இன்னும் சிலர் என்னங்க இது.. இப்படிலாம் போட்டோ போடாதீங்க, உங்களுக்கு ஸ்கூல் போற பையன் இருக்கான், என்று டிவிட் செய்துள்ளனர். ஆனால் உடை என்பது அவர் அவர் சுதந்திரம் என்றும் இன்னும் சிலர் அதற்கு பதில் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: kanika கனிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X