நாங்க ரொம்ப பொறுப்பான புள்ளைங்க.. சைல்டுவுட் நினைவை பகிர்ந்த நடிகை !

சென்னை : சிறு வயதில் விளையாடிய பொம்மைகளோடு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார் நடிகை கனிகா, அதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்னும் அந்த பொம்மையை பத்திரமாக வைத்துள்ளார் கனிகா.

சின்ன வயதில் பொம்மையுடன் விளையாடுவது எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று ,அதிலும் அந்த நினைவுகளை இப்போது நினைத்து பார்த்தால் உண்மையிலேயே அது ஆச்சர்யத்தை தான் கொடுக்கும் .

குழந்தையாக இருந்த போது வைத்து இருந்த பொம்மைகளில் எதாவது ஒரு பொம்மைக்கு நாம் அடிமையாக இருப்போம் .சாப்பிடும் போதும் ,தூங்கும் போதும் அதை கூடவே வைத்து இருப்போம் .

தேவதை

தேவதை

கனிகா பைவ் ஸ்டார் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார் .நடிகர் பிரசன்னாவிற்கும் கனிகாவிற்கும் நல்ல ஜோடி என்ற பெயர் இந்த ஒரு படத்திலேயே கிடைத்தது. வருமான ரீதியாக இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் கல்லூரி மாணவர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .

செலெக்ட்டிவ்

செலெக்ட்டிவ்

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் ஸ்டார் அந்தஸ்து பெற்று பல மொழிகளில் பல வித்தியாசமான கேரக்டர் ரோல் செய்து மக்கள் மனதில் மிகவும் எளிதாக ஒரு நல்ல இடத்தை பிடித்துக்கொண்டார். கனிகா- ஆட்டோகிராப் ,எதிரி ,வரலாறு போன்ற படங்களில் நடித்துள்ளார்.என்பதுகுறிப்பிடத்தக்கது.திரைப்படங்களில் நல்ல கதை தேர்வு, அற்புதமான கதாபாத்திரம் என்று மிகவும் செலக்டிவாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது கனிகாவின் சாமர்த்தியம்.

டேக் இட் ஈசி

டேக் இட் ஈசி

தமிழ் மலையாளம் மற்றும் சில மொழிகளில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு வெற்றிநடை போடுகிறார் .சினிமா வாழ்க்கையும் சரி, தன் குடும்ப வாழ்க்கையும் சரி எந்தவித டென்ஷனும் இல்லாமல் மிகவும் ஜாலியான ஒரு ஈஸி கோ பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அழகான குரல்

அழகான குரல்

ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் ,பின்னணி குரல் கொடுப்பதிலும் இவர் கை தேர்ந்தவர் .சச்சின் படத்தில் துறுதுறு ஜெனிலியாவிற்கும், அந்நியன் படத்தில் சதா மாமிக்கும் , சிவாஜி படத்தில் ஷ்ரேயாவிற்கும் குரல் கொடுத்துள்ளார். அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

ரொம்ப நாட்டி

ரொம்ப நாட்டி

எல்லோருக்கும் சிறுவயதில் அழகான சட்டை, சின்னஞ் சிறு பொம்மைகள் கவிதைகள் ஆட்டோகிராஃப் புத்தகங்கள் போன்ற விஷயங்களை மிகவும் பத்திரமாக பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அப்படி கனிகாவும் தன் சிறுவயதில் விளையாடிய ஒரு அழகான குட்டி பொம்மையை போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் பொது நமக்கும் பழைய நினைவுகள் வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ரொம்ப பொறுப்பு

ரொம்ப பொறுப்பு

எல்லா நடிகைகளும் தனது இன்ஸ்டா,ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கனிகா சிறு வயதில் விளையாடிய பொம்மையை வைத்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.இந்த புகைப்படம் அவர்களது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .நாங்க சின்னதுல இருந்தே ரொம்ப பொறுப்பான புள்ளைங்க என்று பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X