எங்கள் வாரிசு.. களைகட்டிய 5ம் மாத வளைகாப்பு.. மகிழ்ச்சியில் கன்னிகா சினேகன்!

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திர ஜோடியாக ஜொலித்துக்கொண்டு இருக்கும் கன்னிகா, சினேகன் தம்பதி விரைவில் பெற்றோராக உள்ளனர். கடந்த சில மாதத்திற்கு முன் கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது கன்னிகாவிற்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு நடந்துள்ளது.

பாடலாசிரியரான சினேகன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவரின் முகம் அனைவருக்கும் பரீச்சீயமானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

snehan kannika baby shower

காதல் திருமணம்: பாடலாசிரியர் சினேகன், பத்து ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகாவை கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். நடிகையான கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கல்யாண வீடு' என்ற தொடரில் நடித்திருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்துள்ளார்.

snehan kannika baby shower

பத்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த போதும், அந்த காதலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர். இவர்களின் திருமண தேதி வெளியான போதுதான், இவர்கள் காதலித்த விஷயமே ஊடகத்திற்கு தெரியவந்தது. நாங்கள் காதலித்த போதும், பொது இடத்தில் நாங்கள் சந்தித்து கொண்டது இல்லை, அதை என் கணவர் விரும்பவில்லை என்று கன்னிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

snehan kannika baby shower

வளைகாப்பு: திருமணத்திற்கு பிறகு, சினேகா மற்றும் கன்னிகா இருவருமே இணையத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரின் காதல், ரொமான்ஸ் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த சில மாதத்திற்கு முன் போட்டோவை வெளியிட்டு, நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்.. உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும் என கன்னிகா பதிவிட்டு இருந்தார். தற்போது கனிகாவின் ஐந்தாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சி அழகாக நடந்துள்ளது. அந்த போட்டோவில் சினேகன் தனது காதல் மனைவிக்கு நலங்கு வைத்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

snehan kannika baby shower

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X