ப்பா.. என்ன ஒரு ரொமான்ஸ்.. கணவருக்கு மெட்டி அணிவித்து காதலர் தின வாழ்த்து சொன்ன சினேகனின் மனைவி!

சென்னை : காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், சினேகனின் மனைவி கன்னிகா,கணவருக்கு மெட்டி அணிவித்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் கன்னிகா ரவி

நடிகை கன்னிகாவும், பாடலாசிரியர் சினேகனும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

அதுமட்டுமில்லாமல், சினேகன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன் உலக நாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.

கணவனுக்கு ஏற்ற ஜோடி

கணவனுக்கு ஏற்ற ஜோடி

சினேகனின் மனைவி கன்னிகா தான் கணவருக்கு ஏற்ற சரியான ஜோடிதான் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். ஓவியம் வரைவது, சிலம்பம் சுற்றுவது என இப்போது ஆக்டிவாகவே இருக்கிறார். எங்கு சென்றாலும், கணவன், மனைவி இருவருமே மேட்சிங் மேட்சிங் உடையில் ஜோடியாக வலம் வருகின்றனர். இதைப் பார்க்க நமக்கே கொஞ்சம் பெறாமையாகத்தான் இருக்கும்.

ப்பா…என்ன ஒரு ரொமான்ஸ்

ப்பா…என்ன ஒரு ரொமான்ஸ்

இந்நிலையில்,நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், கன்னிகாவும் சினேகனும் ஒரே மாதியான உடையில் ஜோடியாக வலம் வந்தனர். மேலும், காதலர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கன்னிகா தனது காதல் கணவர் சினேகனின் காலில் மெட்டி அணிவித்து அழகு பார்த்தார். இணையத்தில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ப்பா...என்ன ஒரு ரொமான்ஸ் என்று கருத்துக்கூறி லைக்குகளை பரிசாக அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X