நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று.. வீட்டிற்கு சீல் வைத்தது மும்பை மாநகராட்சி!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கரீனா கபூரின் வீட்டிற்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். பாலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார் கரீனா கபூர்.

நடிகை கரீனா கபூர் 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான சய்ஃப் அலிகானை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கரீனா கபூருக்கு தொற்று

கரீனா கபூருக்கு தொற்று

இந்நிலையில் நடிகை கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழியான நடிகை அம்ரிதா அரோராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெருங்கிய தோழிகளான கரீனா கபூரும் அம்ரிதா அரோராவும் ஒன்றாக வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.

விதிகளை மீறி நிகழ்ச்சிகளில்..

விதிகளை மீறி நிகழ்ச்சிகளில்..

இந்நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்

நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள நடிகை கரீனா கபூர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து மருத்துவ நெறிமுறைகளையும் பின்பற்றும் போது நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

எழுந்து வருவேன் என்று நம்புகிறேன்

எழுந்து வருவேன் என்று நம்புகிறேன்

என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களும் இரட்டை டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எந்த அறிகுறியும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, நான் நன்றாக உணர்கிறேன், விரைவில் எழுந்து வருவேன் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

கரீனா கபூர் வீட்டிற்கு சீல்

கரீனா கபூர் வீட்டிற்கு சீல்

இதனிடையே பி.எம்.சி அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கரீனா கபூர் கானின் வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் சரியான தகவலை வழங்கவில்லை, எத்தனை பேர் கரீனா கபூருடன் தொடர்பில் இருந்தனர் என்பதை எங்கள் அதிகாரிகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்" என்றும் பி.எம்.சி. தெரிவித்துள்ளது. கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X