இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா!

சென்னை: இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன் என நடிகை கார்த்திகா நாயர் மனமுடைந்து பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா நாயர்.

நடிகை ராதாவின் மகளான இவர் இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோ படம்

கோ படம்

அயன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் கோ. ஜோஷ் எனும் தெலுங்கு படத்தில் 2009ம் ஆண்டு நாயகியாக அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர் தமிழில் கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கோ படம் கார்த்திகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

கே.வி. ஆனந்த் கதை

கே.வி. ஆனந்த் கதை

பத்திரிகை ஒன்றில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய தனது வாழ்க்கை அனுபவத்தை கோ படத்தில் நாயகன் ஜீவாவின் கதாபாத்திரமாக உருவாக்கி இருந்தார் இயக்குநர் கே.வி. ஆனந்த். நான்காவது தூணான பத்திரிகை சக்தி மூலமாக ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் படமாக்கி வெற்றியும் கண்டார் கே.வி. ஆனந்த்.

Recommended Video

KV Anand மறைவு! பிரபலங்கள் கண்ணீர் | Vivekh இழப்பே மறக்கவில்லை #RIPAnand
கார்த்திகா அதிர்ச்சி

கார்த்திகா அதிர்ச்சி

இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து போயுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, மோகன் லால் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், கோ படத்தின் நாயகி கார்த்திகா நாயரும் கே.வி. ஆனந்த் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஃபேக் நியூஸ்னு சொல்லுங்க

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கார்த்திகா நாயர், இந்த அதிர்ச்சியான செய்தி அறிந்து தான் எழுந்தேன். யாராவது ஒருவராச்சும் இது ஒரு ஃபேக் நியூஸ்னு சொல்லுங்களேன் என மிகவும் மனமுடைந்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஜீவா உள்ளிட்ட பிரபலங்களும் இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X