கவனம் ஈர்த்த கார்த்திகா நாயரின் திருமண புடவை.. வாய்பிளக்க வைக்கும் நகை மதிப்பு!

சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமணத்தில் அணிந்திருந்த நகைகளைப் பார்த்து ரசிகர்கள் அப்படியே வாயைப்பிளந்தனர்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராதா, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் என பல ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Actress Karthika Nair wedding saree and jewellery worth

கனவு கன்னியாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகை ராதா , ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா நாயர், துளசி என்ற இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

நடிகை கார்த்திகா நாயர்: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்ற கார்த்திகா நாயர். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தார்.

கவனம் ஈர்த்த புடவை: இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெற்றுத்தராததால், தனது அப்பாவின் ஓட்டல் தொழிலை கவனித்துக்கொண்டு இருந்த கார்த்திகா நாயருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், கார்த்திகா நாயர் அணிந்து இருந்த புடவை பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெரூன் நிறத்தில் தங்கஇழைகளால் நெய்யப்பட்ட புடவையில் வானத்தில் இருந்து வந்து தேவதைபோல ஜொலித்தார்.

Actress Karthika Nair wedding saree and jewellery worth

மொத்தமும் தங்கம்: அந்த புடவைக்கு ஏற்றபடி தலை முதல் கால் வரை மொத்தமும் தங்கத்தால் செய்யப்பட்ட புது புது நகைகள் தகதகவென்று மின்னியது. அவர் திருமணத்திற்கு அணிந்து இருந்த நகை மட்டும் பல கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு மட்டுமில்லாமல் மெகந்தி பங்ஷன், நலங்கு பங்ஷன், திருமண வரவேற்பு என பல சடங்கிற்கும் விதவிதமான தங்க நகைகளையே அவர் அணிந்து இருந்தார்.

Actress Karthika Nair wedding saree and jewellery worth

300 கோடி சொத்து: கடினமாக உழைப்பாளியான கார்த்திகா நாயரின் தந்தை ராஜசேகரன் நாயர் மும்பை மற்றும் கேரளாவில் ஹோட்டல் வைத்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பாஜகவின் தேசிய அவை உறுப்பினராக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X