உடைந்து அழுத நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா.. பாட்டி சரசம்மாவின் மறைவு
கொச்சி: தென்னிந்திய திரையுலகின் 80-களின் பெரும்பாலான ரசிகர்களின் அபிமான நாயகிகளாக வலம் வந்தவர்கள் அம்பிகாவும் ராதாவும். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர்களின் தாயார் சரசம்மா நாயர் கடந்த 27 தேதி காலமானார். அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்கில் நடிகையும் நடிகை ராதாவின் மகளுமான கார்த்திகா தேம்பித் தேம்பி அழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சரசம்மா நாயர் என்பவர் நடிகைகளின் தயார் என்ற அடையாளத்துடன் மட்டும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. சினிமாவிலும் அரசியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சரசம்மா நாயர், தனது மகள்களின் திரைப்பயணத்தில் பின்னணியில் இருந்து அசைக்க முடியாத தூணாக நின்றவர். அவரது புத்திசாலித்தனம் மட்டுமே அம்பிகா - ராதா ஜோடி தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் நினைவுகூரப்படும் உச்ச நடிகைகளாக உருவாகக் காரணம் என்று கூறலாம். அவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

சரசம்மா நாயர்: தனது மகள்களுக்கு உறுதுணையாக இருந்தது மட்டும் இல்லாமல், அரசியலிலும் சரசம்மா நாயர் மிகவும் பலமான ஆளுமையாக தான் விளங்கியுள்ளார். குறிப்பாக கேரளா காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ், அதாவது மகளிர் காங்கிரஸில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர். மகிளா காங்கிரஸில் தனது தலைமையிலேயே பெண்களுக்கான பல உரிமைப் போராட்டங்களை முன் நின்று நடத்தி உள்ளார். இவரது ஈடுபாட்டை பார்த்த காங்கிரஸ் மேலிடம், இவருக்கு கேரளா மகிளா காங்கிரஸின் தலைவர் பொறுப்பு கொடுத்தது.
கண்ணீரில் கார்த்திகா: இந்நிலையில் இவர் கடந்த 27ஆம் தேதி மறைந்தது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் சரசம்மாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சரசம்மாவின் இறுதிச்சடங்கின் போது,நடிகை ராதாவின் மூத்த மகள், கார்த்திகா தேம்பித் தேம்பி அழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ARS கார்டன் என்று அம்பிகா ராதா சரசம்மா.மூன்று பேர் பெயரில் ஸ்டியோ வைத்து இருந்தார்கள். அம்பிகா ராதாவுக்கு எல்லாமே அம்மாதான். இந்த இழப்பு தாங்க முடியாது தான் என்று பதிவிட்டு வருகிறார்கள். சிலர் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











