நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல, தளபதி ரசிகர்களே.. இவரு சொல்றத கேளுங்க!

சென்னை: அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் பாடல் கடந்த 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாடல் 4 நாட்களில் மில்லியன் வியூஸ்களை அள்ளியது.

இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் அடுத்த 2 நாட்களின் வெளியிடப்பட்டது. கணவன் மனைவி உறவை வெளிப்படுத்தும் இந்த பாடல் இரண்டே நாட்களில் விஜய் படத்தின் சாதனையை முறியடித்தது.

ரசிகர்கள் மோதல்

ரசிகர்கள் மோதல்

இதனால் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று அஜித் ரசிகர்கள் #RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை ட்ரென்ட்டாக்கினர்.

வதந்திகளை நம்பாதீர்

வதந்திகளை நம்பாதீர்

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். விஜய் நலமாக உள்ளார் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜய் தரப்பில்ல இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சூடான சோஷியல் மீடியா

சூடான சோஷியல் மீடியா

இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுக்கு எதிராக ட்ரென்ட்டாக்கினர். இதனால் நேற்றிரவு வரை சமூக வலைதளங்கள் படு சூடாக காணப்பட்டன.

ஊர் வாழ்த்தும்

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித் தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும் என கூறியுள்ளார்.

தேசிய அளவில் வைரல்

மற்றோரு டிவிட்டில் நேற்று தமிழக திரை நட்சத்திரங்கள் இந்திய அளவில் ட்ரென்ட்டாகினர். விஜய், அஜித் ரசிகர்கள், சரவணன், கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கமல்-சரவணன், தல-தளபதி ரசிகர்கள் புண்ணியத்துல நேற்று தமிழன்தான் தேசிய அளவில் வைரல். ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்க கண்ணியம், பெண்ணியம், நாகரிகம் என்றும் பதிவிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X