twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4ம் தேதி பிக் பாஸ்க்கு போகும் கஸ்தூரி.. வெளியான வாட்ஸ்அப் ஆதாரம்.. அவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா?

    பிக் பாஸ் போட்டியில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என நடிகை கஸ்தூரி மீண்டும் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Kasturi Entry : 4-ம் தேதி பிக் பாஸ்க்கு போகும் கஸ்தூரி- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் குறித்து பரவி வரும் செய்தியால் டென்ஷனில் இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

    நடிப்பை காட்டிலும் டிவிட்டரில் தான் பிஸியாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி. நாட்டு நடப்புகளில் எல்லோருக்கும் முன்னோடியாக முதல் ஆளாக வந்து கருத்து சொல்லிவிடுகிறார். சில சமயங்களில் அவை சர்ச்சையை கிளப்பி அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறது.

    பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கிடைத்த புகழைவிட, சமூக வலைதளங்களின் வாயிலாக பிரமாண்ட பப்ளிசிட்டியை அனுபவித்து வருகிறார் கஸ்தூரி. ஏதோ மூலை முடுக்குகளில் ஒளிந்துகிடப்பவர்களைக்கூட லைம் லைட்டுக்கு கொண்டு வரும் பிக் பாஸ், கஸ்தூரியை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?

    முதல் சீசனில் இருந்தே

    முதல் சீசனில் இருந்தே

    முதல் சீசனில் இருந்தே கஸ்தூரியை வைத்து டிஆர்பியை ஏற்ற நினைத்தார் பிக் பாஸ். ஆனால் இதுவரை பிடிகொடுக்காமல் தப்பி வருகிறார் அவர். பிக் பாஸ் வீட்டில் தன்னால் 100 நாட்கள் எல்லாம் இருக்க முடியாது என்பது கஸ்தூரியின் வாதம்.

    நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரி

    ஆனால் பிக் பாஸ் சீசன் தொடங்கும் போதெல்லாம், செய்திகளில் வெளியாகும் போட்டியாளர்கள் பட்டியலில் கஸ்தூரியின் பெயர் நிச்சயம் இருக்கும். கடைசி நேரத்தில் தான் கஸ்தூரி போகவில்லை என்பது தெரியவரும்.

    மீண்டும் உலா வரும் செய்தி

    மீண்டும் உலா வரும் செய்தி

    தன்னால் பிக் பாஸ் வீட்டிற்கு போக முடியாது என கஸ்தூரி பலமுறை கூறியும் கூட இந்த செய்திகள் மீண்டும் மீண்டும் உலா வருகின்றன. இந்நிலையில், அதேபோன்றதொரு செய்தி தற்போது தீயாக பரவி வருகிறது. அதாவது, நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார் என்பது தான் அது.

    வாட்ஸ்அப் ஆதாரம்

    வாட்ஸ்அப் ஆதாரம்

    ஆனால் இம்முறை ஒரு வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட் ஆதாரத்துடன் இந்த செய்தி பரவி வருகிறது. அதில், விஜய் டிவி ஊழியர் ஒருவருடன் கஸ்தூரி வாட்ஸ்அப்பில் உரையாடுவது போல் உள்ளது. 4ம் தேதி முதல் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல தான் தயாராக இருப்பதாக கஸ்தூரி அதில் குறிப்பிட்டுள்ளதாக இருக்கிறது. இதனால் கஸ்தூரி கட்டாயம் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறார் என செய்தி வைரலானது.

    கஸ்தூரி மறுப்பு

    இம்முறையும் அந்த செய்தியை மறுத்துள்ளார் கஸ்தூரி. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், " போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்", என காட்டமாக தெரிவித்துள்ளார்.

     பிக் பாஸ்க்கே வெளிச்சம்

    பிக் பாஸ்க்கே வெளிச்சம்

    கஸ்தூரி இந்த டிவீட், பிக் பாஸ் வீட்டிற்கு அவர் போகவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஆனால் அப்படி ஒரு தகவலை யார் கிளப்பிவிடுகிறார்கள் என்பது பிக் பாஸ்க்கே வெளிச்சம்.

    English summary
    Actress Kasthuri denied the rumours that she is entering into bigg boss house in wild card.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X