அம்மன் அவதாரம் எடுத்த கஸ்தூரி.. பக்தி பரவசமான ரசிகர்கள்!

சென்னை : திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போன நடிகை கஸ்தூரி இப்பொழுது அம்மன் வேடத்தில் வந்து தரிசனம் கொடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு புறம் திரைப்படங்கள் மற்றொரு புறம் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் கஸ்தூரி சென்ற ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து அனைவரையும் மிரள வைத்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் அதே சமயம் இப்பொழுது அம்மன் கெட்டப்பில் வந்து அனைவரையும் பரவசப்படுத்தியுள்ள புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

வெற்றிக் கொடியை

வெற்றிக் கொடியை

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி 1990களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது வெற்றிக் கொடியை நாட்டி வந்தார்.

ஆத்தா உன் கோயிலிலே

ஆத்தா உன் கோயிலிலே

ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

திறமையான நடிகை

திறமையான நடிகை

திரைத்துறைக்கு அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே தனது திறமையான நடிப்பின் மூலம் பல மொழிகளில் கொடிகட்டிப் பறந்த கஸ்தூரி பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகி குணச்சித்திரம் சிறப்புத் தோற்றங்கள் என பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

பல நாட்கள் ஓடி

பல நாட்கள் ஓடி

தமிழில் கட்டுமரக்காரன், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் பல நாட்கள் ஓடி மிகப்பெரிய பெயரையும் புகழையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

கவர்ச்சி நடனம்

கவர்ச்சி நடனம்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறையில் காலடி பதித்த கஸ்தூரி இப்பொழுது பல்வேறு குத்தாட்ட பாடலுக்கு வந்து கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து செல்கிறார்.

அம்மன் கெட்டப்பில்

அம்மன் கெட்டப்பில்

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் கஸ்தூரி இதுவரை பல்வேறு திரைப்படங்களில் பல வேடங்களை ஏற்று நடித்து இருந்தாலும் இப்பொழுது இவர் வெளியிட்டிருக்கும் அம்மன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அம்மா தாயே

அம்மா தாயே

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாடு முழுவதும் வெகு விமர்சையாக பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கஸ்தூரி தான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அம்மன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியிருப்பது பலரையும் பரவசப் படுத்தி இருக்கும் நிலையில், கஸ்தூரியை அம்மன் கெட்டப்பில் பார்த்த பலரும் அம்மா தாயே என பரவசமான நிலைக்கு போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X