ஆபாசமாக பேசும் அஜித் ஃபேன்ஸ்.. அதிரடி பதில் கொடுக்கும் நடிகை.. கெட்ட வார்த்தைகளால் கதறும் டிவிட்டர்!

சென்னை: நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். தற்போதும் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

அதோடு அரசியல் விமர்சகராகவும் உள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

அவ்வப்போது முக்கிய நிகழ்வுகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிவிட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். ஆனால் போன வேகத்தில் கவின் - லாஸ்லியா காதல் குறித்து பேசினார்.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

இதனால் கவினின் கோபத்திற்கு ஆளானார். இதனால் கவின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாய் நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தமாய் உள்ளது. கஸ்தூரி என்ன பேசினாலும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர் சில நெட்டிசன்கள்.

அஜித் பெயர்

அஜித் பெயர்

அவர்கள் பெரும்பாலும் அஜித்தின் படத்தையே தங்களின் டிபியாக வைத்துள்ளனர். அதேபோல் அஜித் நடித்த படங்களின் பெயரையே தங்களின் பெயராக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்களின் பெயருக்கு பின்னால் அஜித்தின் பெயரையும் சேர்த்துக் கொண்டு சமூக வலைதளங்களில் வலைய வருகின்றனர்.

கேவலமான சொற்கள்

அவர்கள் கஸ்தூரி என்ன பேசினாலும் அதற்கு விதண்டாவாதமாக பேசுவதையும் ஆபாச கருத்துக்களை பதிவிடுவதையும் வேலையாக கொண்டுள்ளனர். ஒரு பெண் என்றும் பாராமல் படு கேவலமான சொற்களை பயன்படுத்தி அவரை வசை பாடி வருகின்றனர். வாயால் சொல்ல முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர்.

கண்டு கொள்ளவில்லை

இது தொடர்பாக தங்களின் ரசிகர்களை கட்டுப்படுத்துமாறு நடிகர் அஜித் மற்றும் அவரது மேனேஜரான சுரேஷ் சந்திராவுக்கும் டிவிட்டரிலேயே கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. சுரேஷ் சந்திராவின் பெயரிலேயே கஸ்தூரியை கலாய்த்தனர்.

அசராமல் பதிலடி

இந்நிலையில் தற்போது மீண்டும் கஸ்தூரியுடன் மல்லுக்கட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். பலரின் அக்கவுண்ட்டை பிளாக் செய்த போதும் அடங்குவதாய் இல்லை அவர்கள். இன்றும் மோதல் தொடங்கி விட்டது. தன்னை கெட்ட வார்த்தையால் திட்டும் அஜித் ரசிகர்களுக்கு அசராமல் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X