நடிகைகளின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது தான் வேலையா? அசிங்கமா இல்ல.. கஸ்தூரி பளீர்!
சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை அடுத்து பல நடிகைகள், பல முன்னணி நடிகர் மீது புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து ஆவேசமாக பேசி உள்ளார்.
எந்த ஒரு பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வருவதில்லை. ஆனால் சில தவறான பெண்கள் சினிமாவிற்கு வந்து அதன் மூலம் பிரபலமாகி தவறான முறையில் சம்பாதித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நோக்கத்தோடு சினிமாவிற்கு வரும் பெண்களும் இருக்கிறார்கள். சினிமாவிற்காக கஷ்டப்படும் பெண்களும் இருக்கிறார்கள். நாக்கில் நரம்பு இல்லாதவன் எது வேண்டுமானாலும் பேசுவான்.

உப்புமா கம்பெனிகள்: சினிமாவில் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் யாரும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது இல்லை. ஆனால், சினிமாவை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உப்புமா கம்பெனிகள் ஆண்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். அதே போல பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். இது பள்ளி, கல்லூரி என அனைத்து இடத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வாயை பிளந்து கொண்டு சினிமாவை பற்றி மட்டும் தான் அனைவரும் பேசுகின்றனர். சினிமாவில் படிக்காதவர்கள், வயதில் குறைந்தவர்கள், ஏழ்மையானவர்கள் இருப்பதால் இது அதிகம் நடக்கிறது.
யார் கூட படுத்தா உனக்கு என்ன: இந்த பேட்டியை பார்த்துவிட்டு பலர் நீ என்ன ஒழுக்கமா, இதையெல்லாம் நீ சொல்லுற என்ற கமெண்ட் செய்வார்கள். நான் கேட்கிறேன் நான் யார் கூட படுத்தா உனக்கு என்ன, நான் படுத்ததை நீ பாத்தியா.. யார் யார் கூட படுத்தா மக்களுக்கு என்ன, அடுத்தவர்களின் படுக்கை அறையை பார்ப்பது தான் மக்களின் வேலையா, வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் பெண் ஏமாறுகிறார்களா என்று கேட்கிறார்கள். ஏன் ஆண் ஏமாற்றுகிறார்கள் என்று கேட்பதில்லை.
தண்டிக்கப்பட வேண்டும்: இதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களையும் நான் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. சினிமா மட்டுமில்லாமல் எல்லாத்துறைகளையும், பெண்களை ஏமாற்றுபவர்கள், குடிக்கு அடிமையானவர்கள், பெண் பித்து பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும், தவறு செய்யும் ஆண்கள் தண்டிக்கப்பட்டால் தான் இது போன்ற குற்றம் குறையும் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் ஆவேசமாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











