கேவலமானவர்கள்.. மாணவிகளை காம எண்ணத்துடன், ஆசிரியர்களால் எப்படி பார்க்க முடிகிறது? விளாசிய நடிகை!
சென்னை: பள்ளியில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேதனை அளிக்கிறது..
இந்த சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கஸ்தூரி தெரிவித்திருப்பதாவது, ‘‘கோவையில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது.

கேவலமானவர்கள்..
சிறு பிள்ளைகளை காம எண்ணத்தில் பார்க்கும் அளவுக்கு நம்முடைய சமூகம் மாறி இருப்பது கவலையை தருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரும் அதை பொறுத்துக்கொள் என்று சொன்ன தலைமை ஆசிரியையும் கேவலமானவர்கள்.

ஏன் ஆசிரியர் தொழில்?
பள்ளிக்கு வரும் மாணவிகளை காம எண்ணத்துடன், ஆசிரியர்களால் எப்படி பார்க்க முடிகிறது? இவர்கள் எதற்கு ஆசிரியர் தொழிலுக்கு வர வேண்டும்? நான் பெரும்பாலும் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். கூட்ட நெரிசலில் என்னையும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர்.
Recommended Video

கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்தனர். பெண் பிள்ளைகள் தங்களுக்கு நேரும் அத்து மீறல்களை வீட்டில் கட்டாயம் சொல்ல வேண்டும். கோவை மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications