தேசிய விருது பெற்ற இளம் கன்னட நடிகர் மரணம்.. நடிகை கஸ்தூரி இரங்கல்!

சென்னை: பிரபல இளம் கன்னட நடிரான சஞ்சரி விஜய்யின் மறைவுக்கு நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரான சஞ்சரி விஜய் நேற்று முன் தினம் தனது நண்பரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சந்தித்துவிட்டு திரும்பும்போது சஞ்சரி விஜய் விபத்தில் சிக்கினார்.

ஐசியூவில் தீவிர சிகிச்சை

ஐசியூவில் தீவிர சிகிச்சை

இதில் தலையில் பலத்த காயமடைந்த சஞ்சரி விஜய் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆபத்தான நிலை

ஆபத்தான நிலை

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் சஞ்சரி விஜய்க்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் ரத்தப் போக்கு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்தார் சஞ்சரி விஜய்.

உறுப்புகள் தானம்

உறுப்புகள் தானம்

இந்நிலையில் சஞ்சரி விஜய்க்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து சஞ்சரி விஜய்யின் உறுப்புகளை தானம் செய்து விட்டு அவரது உடலை பெற்றுக்கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் கன்னட சினிமா

அதிர்ச்சியில் கன்னட சினிமா

38 வயதே ஆன நடிகர் சஞ்சரி விஜய்யின் மரணம் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருது பெற்றுள்ள சஞ்சரி விஜய்யின் மறைவு ஒட்டுமொத்த கன்னட சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை கஸ்தூரி இரங்கல்

நடிகை கஸ்தூரி இரங்கல்

அவரது மறைவுக்கு கன்னட சினிமா மட்டுமின்றி மற்ற மொழி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் சஞ்சரி விஜய்யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகவும் சோகமான செய்து

மிகவும் சோகமான செய்து

இதுதொடர்பான அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது, மிகவும் சோகமான செய்தி. தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சமூக சேவைக்காகவும் பெயர் பெற்ற சஞ்சரி விஜய் (38) பெங்களூருவில் சனிக்கிழமை சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் பலியானார். விஜய்யின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: sanchari vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X