ச்சை... இப்படி ஆயிடுச்சே... சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பால் நொந்துபோன பிரபல நடிகை!
சென்னை: நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவகாரத்து செய்வதாக அறிவித்ததால் பிரபல நடிகையான கஸ்தூரி அப்செட் ஆகியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

7 ஆண்டு காதல்
அப்போது நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை 7 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைத்ராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பெரிய குடும்பத்தில் மருமகள்
பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பெரிய குடும்பமாக கருதப்படும் நாகார்ஜூனா அக்கினேனி குடும்பத்தில் ஒருவரான நடிகை சமந்தா. திருமணத்துக்கு பிறகு சமந்தாவின் சினிமா கிராஃப் எகிறியது.

விசேஷங்களை புறக்கணித்த சமந்தா
இதனிடையே நடிகை சமந்தாவுக்கு மாமனார் வீட்டுடன் மனஸ்தாபம் ஏற்படுவதாக தகவல் பரவி வருகிறது. அக்கினேனி குடும்பத்தில் நடைபெறும் பல விசேஷங்களில் பங்கேற்காமல் நடிகை சமந்தா புறக்கணித்து வருவதாக தகவல் வெளியானது.

அக்கினேனியை நீக்கிய சமந்தா
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை அதிரடியாக நீக்கினார். தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா நடித்த சர்ச்சைக்குரிய காட்சிகளால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

நாகார்ஜூனாவின் பிறந்தநாள் விழா
மேலும் சமந்தா நாக சைதன்யாவை பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. அதோடு நாகார்ஜூனாவின் பிறந்தநாள் விழா, பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் வழங்கிய இரவு விருந்து, நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி பட சக்கஸ் பார்ட்டி போன்ற எதிலும் நடிகை சமந்தா பங்கேற்கவில்லை.

விவாகரத்து செய்தி வதந்தி
இதனால் இருவரும் விவாகரத்து பெறப்போவது உறுதி என்றும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்தது. மேலும் ஜீவனாம்சமாக நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா குடும்பத்தினர் 50 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என்றும் கூறப்பட்டது.

ரசிகர்கள் பிரபலங்கள் அதிர்ச்சி
இந்நிலையில் தாங்கள் இருவரும் பிரிவதாக இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எப்போதும் இருக்கும் என்று நம்பினேன்
அந்த வகையில் பிரபல நடிகையான கஸ்தூரியும் தனது அதிருப்தியை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, அவர்களின் கற்பனை கதை என்றென்றும் இருக்கும் என்று நான் உண்மையில் நம்பினேன்.. என பதிவிட்டு நொறுங்கிய இதயத்துடன் பெருமூச்சு விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











