அம்மாவின் புடவையை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.. பீரோ பீரோவாக புடவை வைத்திருக்கும் கஸ்தூரி!

சென்னை: நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி, அவ்வப்போது சமூகம், அரசியல், சினிமா என அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கஸ்தூரி, தன் அம்மாவின் புடவையை பொக்கிஷம் போல பாதுகாத்து வருவதாகவும், தன்னிடம் பீரோ பீரோவாக புடவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டஸ்கி ஸ்கின் அழகியாக 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 1992 இல் மிஸ் மெட்ராஸ் என்று அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றிருக்கிறார்.

Kasthuri interview indian

திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த கஸ்தூரி 2009 ஆம் ஆண்டு மலை மலை திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது பல திரைப்படங்களில் கௌரவ கதாபாத்திரத்திலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த, நடிகை கஸ்தூரி, தன்னிடம் உள்ள புடவைகள் குறித்து பேசி உள்ளார். அதில், எனக்கு மார்டன் உடையைவிட புடவைதான் மிகவும் பிடித்த உடை. குறிப்பா பட்டுப்புடவையை விட, கைத்தறி சேலை எனக்கு பிடித்தமான ஒன்று. சேலை எனக்கு பிடிப்பதற்கு காரணம் என் அம்மாவின் புடவைகள் என்னிடம் உள்ளது, என்னிடம் இருக்கும் புடவையை நான் மகளுக்கு கொடுப்பேன். இப்படி பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய நினைவு சின்னங்கள் தான் சேலைகள்.

அம்மாவின் பொக்கிஷம்: என் அம்மாவின் சேலைகள் எல்லாம் எனக்கு பொக்கிஷம், ஒவ்வொரு புடவைக்கும் ஒவ்வொரு நினைவு இருக்கு, அதை போட்டோவில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்வேன். அது மட்டுமில்லாமல், அனைவரின் உடல் வாகுக்கும் சேலை பொருத்தமானதாக இருக்கும், ஒரு பெண்னை பெண்ணாக காட்டுவது சேலை தான். கவர்ச்சியாக தெரியவேண்டும் என்றாலும் சேலை கட்டலாம், ஹோம்லியாக தெரிய வேண்டும் என்றாலும் சேலை கட்டலாம் இப்படி எல்லாத்துக்கும் சேலை சரியான உடையாக இருக்கிறது.

100 ரூபாயில் சேலை: அதே போல லட்ச ரூபாய்க்கும் சேலை வாங்கலாம், 200 ரூபாய்க்கும் சேலை வாங்கலாம். நான் எப்போதுமே 100 ரூபாய்க்குத்தான் சேலை வாங்குவேன், என்னிடம் லட்ச ரூபாய் சேலை முதல் 100 ரூபாய் சேலை வரை இருக்கு. என் பாட்டியின் புடவை, என் அம்மாவின் புடவை, என் புடவை என பீரோ பீரோவா வைத்து இருக்கிறேன். எத்தனை சேலைகள் என்னிடம் இருக்கிறது என்று தெரியாது. ஆனால், தெலுங்கு சீரியல் ஒன்றுக்காக 730 சேலைகளை வாங்கினேன். இது தவிர பல புடவைகளை அம்மா, பாட்டியின் நினைவாக பாதுகாத்து வைத்து இருக்கிறேன் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X