என்னை காக்கா என்பவர்களெல்லாம் நோபல் பரிசு வென்றவர்கள்.. ஹாலிவுட் ஹீரோக்கள்.. நக்கலாக விளாசும் நடிகை!

Recommended Video

Logo launch of Thamizhan FC: Kasthuri Speech: கடந்த ஒரு வருடமாக தான் FoodBall வெளிய தெரியுது- வீடியோ

சென்னை: தன்னை காக்கா என்று கூறுபவர்கள் எல்லாம் நோபல் பரிசு வாங்கியவர்கள்,ஹாலிவுட் ஹீரோக்கள் தான் என நக்கலாக விளாசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக சென்றவர் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த கஸ்தூரி, நாமினேஷன் முறையில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது கவினுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. வந்த நாள் முதலே கஸ்தூரி பேசினால் எரிச்சலாகிறது என கேமரா முன்பு தனியாக புலம்பிக் கொண்டிருந்தார்.

காக்கா என பட்டப்பெயர்

காக்கா என பட்டப்பெயர்

கஸ்தூரி, கவினை காமெடி பீஸ் என்று கூறியதும், நான்கு பேருடனான காதல் குறித்து பேசியதும் தான் கஸ்தூரி மீது கவினுக்கு ஏற்பட்ட வெறுப்பிற்கு காரணம். இதனால் கஸ்தூரி பேசினாலே டென்ஷனான கவின், அவருக்கு காக்கா என பட்ட பெயர் வைத்தார்.

கவின் ரசிகர்கள் கிண்டல்

கவின் ரசிகர்கள் கிண்டல்

மேலும் கஸ்தூரி பேசும் போதெல்லாம் பின்னால் கா.. கா.. என கத்தி கிண்டல் செய்தார். இதனால் கவின் ரசிகர்களும் கஸ்தூரியை காக்கா என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.

நக்கல் பதில்

நக்கல் பதில்

இந்நிலையில் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர், அவரை காக்கா என்று கூறி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்த கஸ்தூரி அந்த நெட்டிசனுக்கு அவரது ஸ்டைலிலேயே நக்கலாக பதிலளித்துள்ளார்.

விளையாட்டு அவர்களுடையது

அவர் பதிவிட்டிருப்பதாவது, பாடினதே கவினையும் லாஸ்லியாவையும் பார்த்துத்தான்டா கா பையா. கேமராவுக்கு முன்னாடி பாட்டு என்னுடையது. பின்னாடி விளையாட்டு அவர்களுடையது.

ஹாலிவுட் ஹீரோக்கள்

நான் காக்கானு சொல்றவங்க யாருன்னு பார்த்தா, அட எல்லாரும் நோபல் பரிசு வென்றவர்கள், ஹாலிவுட் ஹீரோக்கள், உழைப்பாளிகள், உத்தமர்கள் என நக்கலடித்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தீர்கள் என பாராட்டியுள்ளனர்.

அப்படிதான் இருப்பாங்க

விடுங்க மேடம் கவின், லாஸ்லியாவ சப்போர்ட் பண்றவங்க அப்படிதான் இருப்பாங்க, என்று ஆறுதல் கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X