அந்த காமெடியை அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல சூர்யா தேவியை காப்பாத்தனும்.. அதிரடி காட்டிய கஸ்தூரி!

சென்னை: கைது செய்யப்பட்ட யூ டியூப் பிரபலமான சூர்யா தேவியை தனது வழக்கறிஞர் மூலம் ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Recommended Video

Surya Devi யை மிரட்டிய Police, அதிர்ச்சி தகவல்

தன்னைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக நடிகை வனிதா, யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி மீது போலீஸில் புகார் அளித்தார்.

அப்போது சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என வனிதா கூறியதால், பதிலுக்கு வனிதா மீது சூர்யா தேவி போலீஸில் புகார் கொடுத்தார்.

 பேச்சு வார்த்தை தோல்வி

பேச்சு வார்த்தை தோல்வி

இருவரும் மாறி மாறி புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த வாரம் வடபழனி போலீசார் இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசத்திற்கு ஒத்து வராத சூர்யா தேவி சட்டப்படி பார்த்துக்கொள்வதாக கூறினார். இதனால் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 சூர்யா தேவி கைது

சூர்யா தேவி கைது

இதனை தொடர்ந்து இருவருமே அவதூறு வீடியோக்கள் வெளியிடக் கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் சூர்யா தேவி தொடர்ந்து வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர்.

 முதல் செய்தி..

முதல் செய்தி..

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த நடிகை கஸ்தூரி, சூர்யா தேவியை காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறி ட்விட்டரில் வீட்டியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் இப்போதுதான் எழுந்தேன், முதல் செய்தியே எங்கள் 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதும் சூர்யா தேவி கைது என்பதும் தான்.

 கம்ப்ளையன்ட் காமெடி

கம்ப்ளையன்ட் காமெடி

என் மீது உள்ள கம்ப்ளையன்ட் காமெடியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்போது முதல் வேலை சூர்யாதேவியை காப்பாற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் வருகிறேன் என்று கூறினார்.

 சூர்யா தேவி விடுதலை

சூர்யா தேவி விடுதலை

இதனிடையே கைது செய்யப்பட்ட சூர்யாதேவியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சூர்யா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர். கஸ்தூரியின் லாயர் தலையிட்டு சூர்யா தேவியை பெயிலில் வெளியே கொண்டு வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X