மெத்தையில் புரண்டபடி குட் நைட் சொன்ன கஸ்தூரி..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை : வயசானாலும் அழகு உன்னைவிட்டு போகல என்ற வசனம் நடிகை கஸ்தூரிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கு. 47 வயதாகியும் முதல் படத்தில் பார்த்தது போல அதே மினுமினுப்புடன் இருக்கிறார் கஸ்தூரி.

Recommended Video

Kasthuri | நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை | Filmibeat Tamil

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது க்யூட் புகைப்படத்தை வெயிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மெத்தையில் புரண்டபடி ஒரு கலக்கலான போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு பலரின் இதயத்தை பரிசாக பெற்றுள்ளது.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம். சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்வார். அனைத்து விவாத நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்வார். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அப்பேட்டுகளுடன் சோஷியல் மீடியாவில் பிஸியாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

பல ஹிட் படங்கள்

பல ஹிட் படங்கள்

தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி. கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பேமஸ்.

க்யூட் நடிகை

க்யூட் நடிகை

சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என்று இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், டிவி சீரியல்களில் நடிப்பது வெப் சீரிஸ்களில் நடிப்பது என்று இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி படவாய்ப்புக்காக மாடலான உடையில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை அசத்தி வருகிறார்.

மெத்தையில் புரண்டபடி

மெத்தையில் புரண்டபடி

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.6மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் கஸ்தூரி, மெத்தையில் படுத்து புரண்டபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஸ்வீட் குட் நைட் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள். இப்படி குட் நைட் சொன்ன எப்படி தூங்குவது என்றும், அட முதல் படத்தில் பார்த்து போல அப்படியே இருக்குறீங்களே என்றும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

புது படத்திற்காக

புது படத்திற்காக

நடிகை கஸ்தூரி சமீபத்தில், கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் தெலுங்கில் சினிமா ஒன்றில் கர்ப்பமாக இருக்கும் இளம் தாய் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் என நடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X