குடும்பம் நடத்திட்டு ஏமாத்திட்டானா எப்படி.. விஜயலட்சுமி மாத்தி மாத்தி பேசுறாங்க..கஸ்தூரி பேட்டி!

சென்னை: மூன்று வருஷம் சேர்நது குடும்பம் நடத்திவிட்டு இப்போது ஏமாத்திட்டான் என்று சொன்னால் எப்படி என நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28ந் தேதி விஜயலட்சுமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சீமானின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளனர்.

Actress Kasthuri interviewed about Seeman and Vijayalakshmi issue

கஸ்தூரி பேட்டி: பூதாகரமாகி வரும் இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை கஸ்தூரி, வாழ்த்துக்கள் என்ற படத்தில் விஜயலட்சுமி சீமானுடன் நடித்த போதுதான் இந்த பிரச்சனை உருவாச்சு, அந்த கேரக்டரில் நான் தான் நடிப்பதாக இருந்தது. அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

சட்டத்தில் இடம் இல்லை: ஒரு பெண், ஆணை காதலித்துவிட்டு வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அந்த பெண், அண்ணா என்னை மறந்துவிடுங்க என்று சொல்லிட்டு போய்விடுகிறாள் இதற்காக எந்த ஆணும் என்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்று வழக்குபோடுவது இல்ல. இருவரும் சேர்ந்து காதலித்து விட்டு, அந்த காதல் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்துவிட்டால், உடனே அந்த பையன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று கூறி நீதிமன்றத்தின் படி ஏறுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

குடும்பம் நடத்தி விட்டு: ஆனால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டான், என்னை கற்பழித்தான், பாலியல் ரீதியாக துன்புறுத்தினான் என்று வழக்கு தொடரலாம். ஆனால் மூன்று வருடம் குடும்பம் நடத்திவிட்டு, இருவரின் சம்மதத்தின் பேரில் இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டு இப்போது என்னை அவன் ஏமாற்றி விட்டான் என்று வழக்கு போட்டால், அதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

இது தனிப்பட்ட விஷயம்: காதலிப்பது, பிரிவது எல்லாம் அவர்களின் தனிப்பட்ட விஷயம், இதை பொதுவெளியில் கொண்டுவந்து வீடியோவை வெளியிட்டு விஜயலட்சுமி அவர்களின் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு இருக்காங்க. அவங்களுக்கு தொலைக்காட்சியிலோ, சினிமாவில் படவாய்ப்புகள் தேடி வரும். இது வந்து நீதி கேட்டோ, பெண் உரிமைக்காக போராடும் ஒரு விஷயமாக எனக்கு தெரியவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

விஜயலட்சுமி பகடைக்காய்: அப்படி சீமானே தவறு செய்து இருந்தாலும், பத்து வருஷம் கழித்து அந்த விஷயத்தை தூசித்தட்டி எடுக்க என்ன காரணம், சீமானை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புவதால் தான், விஜயலட்சுமியை அவர்கள் பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களா என்ற பல கேள்வி எழுகிறது.

மாத்தி மாத்தி பேசுறாங்க: விஜயலட்சுமியின் குடும்பம், அவங்க அம்மா, சகோதரி என அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். விஜயலட்சுமி ஒரு நிலைப்பாட்டில் இல்லை மாத்தி மாத்தி பேசுறாங்க. அவங்க நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது அவர்களின் நன்மைக்கு எந்த வகையிலும் உதவாது. இப்படி நான் பேசியதால், விஜயலட்சுமி என்னை திட்டிக்கூட வீடியோ போடலாம் என்று அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X