வனிதா ஸ்டைலில் பேசி மன்னிப்பு கேட்க சொன்ன கஸ்தூரி.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டிய நடிகை வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தனது கணவரை மீட்டு தருமாறு லக்ஷ்மி ராமருஷ்ணனிடம் உதவி கோரியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அவருக்கு உதவ முன்வந்தார் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இதனால் கடுப்பான வனிதா, எலிசபெத்துக்கு ஆதரவாக பேசுபவர்களை எல்லாம் விளாசி வருகிறார்.

ஆபாச பேச்சு
இந்நிலையில் ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் பங்கேற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணனை, நடிகை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் போடி வாடி என்று பேசியதோடு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசினார்.

கஸ்தூரி நேர்காணல்
அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி வனிதாவுக்கு போட்டியாக யூ டியூப் சேனல் தொடங்கி பதிலடி கொடுத்து வருகிறார். பீட்டர் பால் தன்னுடைய அலுவலகம் என்று கூறிக்கொள்ளும் ரேர் பினாமினன் அலுவலகத்திற்கு சென்று ஒரிஜினல் ஓனர்களிடம் நேர்க்காணல் எடுத்து பதிவிட்டார்.

கஸ்தூரியுடன் லைவ்
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது யூ டியூப் சேனலில் லைவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும நாஞ்சில் விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது வனிதா தகாத வார்த்தைகளால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேள்
மேலும் தனது தகாத நடத்தைக்காக நடிகை வனிதா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் இதன் ஒரு க்ளிப்பிங்கை நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும நாஞ்சில் விஜயன் ஆகியோர் வனிதா மன்னிப்பு கேள் என வலியுறுத்தியுள்ளனர்.

நல்லா வாயில வருது
இதில் ஃபினிஷிங் டச்சாக பேசும் நடிகை கஸ்தூரி, நல்லா வாயில வந்துற போகுதுன்னு அடிக்கடி வனிதா மேடம் சொல்லுவாங்க. வனிதா வாழ்க்கையில ஒரு முறையாவது நல்லது வாயில வரட்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











