Actor Vijay: விஜய் இல்லன்னா சினிமாத்துறை பாதிக்காது.. நடிகை கஸ்தூரி வெளிப்படை!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
அடுத்ததாக தளபதி 69 படத்தில் ஹெச் வினோத்துடன் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் ஒருத்தர் இல்லை என்றால் சினிமாத்துறை பாதித்து விடாது என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளது கவனத்தை பெற்று வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை அவர் துவங்கியுள்ளார். வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
விஜய் பிறந்தநாள்: இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து முடித்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தான் விலக உள்ளதாக நடிகர் விஜய் தன்னுடைய கட்சி அறிவிப்பின்போதே தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளான போதிலும் விஜய் அரசியலில் பெரிதாக சாதிப்பார் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
ரசிகர்கள் அதிருப்தி: இந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இந்த படம் ட்ராப்பாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி வருகின்றது. இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகினால் அவரது படங்கள் மூலமாக லாபங்களை சம்பாதித்து வரும் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று அடுத்தடுத்து பலரும் கூறி வருகின்றனர்.
விஜய் இல்லன்னா சினிமா பாதிக்காது: இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு வெளியேறினால் எந்த பாதிப்பும் இருக்காது என்று நடிகை கஸ்தூரி தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாகவே விஜய் பெரிய ஸ்டாராக இருப்பதாகவும் ஆனால் சினிமா கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடைய பயணத்தை துவங்கி விட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது பேட்டியில் கூறியுள்ளார். அதனால் சினிமா ஒரு ஆளுக்காக எல்லாம் நிற்காது என்று கஸ்தூரி மேலும் தெரிவித்துள்ளார் அது அமிதாப்பச்சன் ஆகவே இருந்தாலும் லியார்னோ டி காப்ரியாவாகவே இருந்தாலும் சினிமா யாருக்காகவும் நிற்காது தனது பயணத்தை தொடரும் என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
யாருக்காகவும் சினிமா நிற்காது: சினிமா என்பது ஒரு கலை என்றும் அது அனைவரது பங்களிப்பையும் சேர்த்து வளருமே தவிர பாதிப்பு என்பது அந்த கலைக்கு எப்போதுமே வராது என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தொடர்ந்து தன்னுடைய மனதில் பட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். ஆயினும் அவர் இவ்வாறு பேசுவதை எப்போதும் நிறுத்தவில்லை. இந்நிலையில் விஜய் இல்லை என்றால் சினிமா துறை பாதிக்காது என்று அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











