ஓவியர் இளையராஜா நினைவை பகிர்ந்த நடிகை கஸ்தூரி..வர்ணித்து புகழும் ரசிகர்கள் !
சென்னை :சமீபத்தில் பிரபல ஓவியரான இளையராஜா மரணம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது .
யாரும் அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது .
கொரோனா பாதிப்பு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்.மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

உதவி இயக்குனர்
ஓவியர் இளையராஜா ஒரு ஓவியராக மட்டும் அல்லாமல் இயக்குனர் ,நடிகர் பார்த்திபன் படமான இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இவரது திடீர் மரணம் சினிமா துறையினருக்கு மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியாக இருந்தது .

பல பாராட்டுக்கள்
இவரது ஓவியங்கள் இயல்பாக இருப்பது மட்டும் இல்லாமல் தத்ரூபமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .இவரது எதார்த்தமான ஓவியத்திற்கு பல ரசிகர்களை இவர் பெற்றுள்ளார் .சினிமா துறையில் ஜாம்பவான்களாக திகழும் பலரிடம் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஷேர் செய்கின்றனர்
இவரது நினைவில் வாடும் ரசிகர்களும் ,சினிமா பிரபலங்களும் இவர் வரைந்த ஓவியத்தை ஷேர் செய்து வருகின்றனர் அந்த வகையில் ,நடிகை கஸ்தூரி ஷேர் செய்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவுகின்றது .

பலருக்கும் பிடிக்கும்
சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் எந்த ஒரு கொடுமைகளாக இருந்தாலும் ,பிரச்சனைகளாக இருந்தாலும் ,எந்த ஒரு கவலையும் ,தயக்கமும் இல்லாமல் குரல் கொடுப்பவர் தான் நடிகை கஸ்தூரி.பலரும் இவருக்கு சர்ச்சை நடிகை என்று பெயர் வைத்தாலும் ,இவரது துணிச்சலை பலரும் பாராட்டத்தான் செய்கின்றனர் .

ரசிகர்கள் புகழ்ச்சி
ஓவியர் இளையராஜாவை நினைவுபடுத்தும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல தத்ரூபமான ஓவியபுகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.நடிகை கஸ்தூரியின் பிளாஷ் பாக் ஓவிய புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது.எதார்த்தமான பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அந்த ஓவியங்களை பலரும் வியந்து புகழுகின்றனர்.இந்த பதிவின் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடிகை கஸ்தூரி .


Click it and Unblock the Notifications











