தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றேகால் கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள நடிகர் அஜித்தை நடிகை கஸ்தூரி மனதார பாராட்டியிருக்கிறார்.

Recommended Video

கொரோனாவை ஒரு கை பார்ப்போம் | ACTRESS KASTHURI | FILMIBEAT TAMIL

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும் சிரமம்

பெரும் சிரமம்

ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சினிமா துறையினர்

சினிமா துறையினர்

இதனை சரிக்கட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள், தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் அரசு நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன். இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் உதவி வருகின்றனர்.

1.25 கோடி

1.25 கோடி

இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார். மேலும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரூ. 25 லட்சம்

ரூ. 25 லட்சம்

தமிழ் சினிமாத்துறையை பொருத்தவரை மத்திய மாநில அரசுகளுக்கு நடிகர் அஜித்துதான் அதிக நிதியை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஃபெஃப்சி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

நீடூழி வாழ்க

நடிகர் அஜித்தின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அற்புதம் தல அஜித்துக்கு தாராள மனசு..

ஸ்பெஷல் நன்றி

ஸ்பெஷல் நன்றி

1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நெருக்கடிக்காக தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன். ஃபெஃப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்கக சிறப்பு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. கடந்த சில நாட்களாக நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே டிவிட்டரில் பெரும் வார்த்தைப்போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X