அசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி
சென்னை : கமல் நடிப்பில் அசுரன் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் எனலாம். இப்படி இரு வேறு துறைகளிலும் திறமையான இருவர் ஒரு படத்தில் இணைய உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய படம் ஒன்றில் கமல் மற்றும் வெற்றிமாறன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. முதல் முறையாக இணையும் இந்த கூட்டணியை காண திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அசுரன் படத்தின் மெகா வெற்றி, தேசிய விருதை பெற்றது ஆகியவற்றால் வெற்றிமாறன் படங்கள் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

ஆர்வத்தை சொன்ன கஸ்தூரி
இந்நிலையில் பல்வேறு விஷயங்களுக்கு ட்விட்டரில் கருத்து சொல்லி பரபரப்பை கிளப்பும் நடிகை கஸ்தூரி, இந்த விஷயத்தில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன் இந்த படத்தை தயாரிக்க போகும் படத்தின் நிறுவனத்தையும் அவர் பாராட்டி உள்ளார்.

அசரன் சொல்லும் அன்பே சிவம்
கஸ்தூரி தனது ட்வீட்டில், அசுரன், அன்பே சிவம் என்பதை போல் வெற்றிமாறன், கமலஹாசன் கூட்டணி இணைய உள்ளது. இது சுவாரஸ்யமான கூட்டணி. இருவரும் தங்களின் கொள்கைகளை சொல்வதில் தனியான ஸ்டைலை கொண்டவர்கள்.

வெற்றிமாறன் படமாக இருக்கும்
இது கமல் படமாக இருக்கும் என்பதை விட வெற்றிமாறன் படமாக இருக்கும் என நான் அடித்துச் சொல்கிறேன். இதை தயாரிக்கும் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இதனை துவக்க தாமதிக்க வாய்ப்பேயில்லை என தெரிவித்துள்ளார்.

ஆண்டு இறுதியில் அறிவிப்பு
வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் வேலைகளும் முடிந்த பிறகு இந்த படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஸியாக இருக்கும் ஜோடி
அதற்குள் கமல், பாபநாசம் 2, இந்தியன் 2 படங்களை நடித்து முடித்து விடுவார் என கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் வேலைகளையும் முடித்து விடுவார் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











