பொய்யை நிஜமென்று ஊரை நம்பவைப்பது பிக்பாஸ் புகழ் விஜய் டிவிக்கு புதிதா என்ன? விளாசி தள்ளிய கஸ்தூரி!

சென்னை: தனது சம்பள பாக்கி விவகாரத்தில் தன் மீது பழியை போட்ட விஜய் டிவியை சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட தனக்கு இதுவரை அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

விஜய் டிவி விளக்கம்

விஜய் டிவி விளக்கம்

பிக்பாஸ் 4 தொடங்கவுள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கஸ்தூரியின் குற்றச்சாட்டு குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் நாங்கள் ஒரு பொறுப்பான சேனல். ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

பொருந்தவில்லை

பொருந்தவில்லை

பிக் பாஸ் தமிழில் கஸ்தூரி ஷங்கரின் பங்கேற்புக்கான தொழில்முறை கட்டணம் 2019 சீசனில் அவருக்கு செலுத்தப்பட்டாலும், அதற்கான ஜிஎஸ்டி தொகை அவரது ஜிஎஸ்டி தாக்கல்களில் பொருந்தாததால் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற நாங்கள் காத்திருக்கிறோம்.

தவறிவிட்டார்

தவறிவிட்டார்

அது கிடைத்த பிறகு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படும். சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவரது கலந்து கொண்டதற்கான இன்வாய்ஸையும் அவர் சமர்ப்பிக்க தவறிவிட்டார், இதன் காரணமாக எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறியிருந்தது. விஜய் டிவியின் அறிக்கை, எங்கள் மீது எந்த தவறும் இல்லை என ஒட்டு மொத்த பழியையும் கஸ்தூரி மீது தூக்கி போடுவதாக இருந்தது.

விஜய் டிவிக்கு புதிதா?

விஜய் டிவிக்கு புதிதா?

இந்நிலையில் விஜய் டிவியின் அறிக்கைக்கு தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, பொய்யை நிஜமென்று ஊரை நம்பவைப்பது பிக் பாஸ் புகழ் விஜய் டிவிக்கு புதிதா என்ன? இப்பொழுது எனது சம்பள பாக்கிக்கான காரணம் என்ன என்று விஜய் டிவி தரப்பில் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவும் அவர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் போலவே தான்.

முழுக்க பொய்தான்

முழுக்க பொய்தான்

உண்மை போலிருக்கும், ஆனால் முழுக்க பொய்தான். நானும் நம்பினேன், ஒரு வருடம் பொறுமை காத்தேன் . விஜய் டிவி ஒரு பெரிய தொலைக்காட்சி, உலகப்புகழ் டிஸ்னி ஸ்டார் கார்பொரேட் நிறுவனம் என்று மதித்து காத்திருந்தேன் . கடைசியில் வெறுத்து போய் வேறு வழியே இல்லாமல் தான் சம்பள பாக்கி விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தேன்.

நான்தான் வரி கட்டியுள்ளேன்

நான்தான் வரி கட்டியுள்ளேன்

அவர்கள் கூறியிருக்கும் அபத்தங்களில் ஒன்று, சம்பள பாக்கி இல்லை, வரியை மட்டும் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது. GST வரியை அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்காமல் பிடித்து வைக்கவெல்லாம் முடியாது. ஏனென்றால் GST வரி கட்டுவது அவர்கள் அல்ல, நான். அதையும், விஜய் டிவி எனக்கு எழுதி குடுத்த கணக்கின் படி, அவர்களின் சொல்படி நான் கட்டியுள்ளேன்.

எதற்கு இன்வாய்ஸ் கொடுக்கவில்லை?

எதற்கு இன்வாய்ஸ் கொடுக்கவில்லை?

எனது சம்பள படிவத்தை நிரப்பி கொடுத்ததே விஜய் டிவி பொருளாளர்தான். மேலும், வரியை பிடித்து வைப்பதானால் அரசுக்கும் எனக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கவேண்டும். அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. பாக்கி வைத்துவிட்டு இப்பொழுது புளுகுகிறார்கள். என்னவோ வேறு ஒரு நிகழ்ச்சி, அதற்கு நான் 'இன்வாய்ஸ்' கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே, அது எந்த நிகழ்ச்சி? கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் எந்தெந்த பிக் பாஸ் போட்டியாளரை வைத்து நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்கள் என்றுதான் ஊருக்கே தெரியுமே.

விஜய் டிவியின் சில்லறை புத்தி

விஜய் டிவியின் சில்லறை புத்தி

என்னை வைத்து எந்த 'வேறொரு' நிகழ்ச்சியை செய்தார்களாம், அதற்கு நான் 'இன்வாய்ஸ்' அனுப்பவில்லையாம்? நான் சம்பளம் கேட்டு அனுப்பிய நோட்டீசுகளுக்கும் சம்பளம் வராத நிலையில் நான் அரசுக்கு கட்டிய GST வரிக்கும் என்னிடம் கட்டுக்கட்டாக ஆதாரம் உள்ளன. விஜய் டிவியின் சில்லறை புத்தி இனி செல்லுபடியாகாது. இவ்வாறு நடிகை கஸ்தூரி காட்டமாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X