பிக்பாஸ் வீட்டுல ஈ தொல்லை தாங்க முடியல.. தயவு செஞ்சு ஒரு முடிவு கட்டுங்க! கழுவி ஊற்றும் கஸ்தூரி!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kasthuri oppose kamal comments

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் பின்னர் நாமினேஷன் முறைப்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சீக்ரெட் ரூமில் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பையும் மறுத்து விட்டார் கஸ்தூரி. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கஸ்தூரி தற்போது பேட்டியளித்துள்ளார்.

ஹவுஸ்மேட்ஸ்கள்

ஹவுஸ்மேட்ஸ்கள்

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்தும் பேசியுள்ளார்.

குப்பை மறுசுழற்சி இல்லை

குப்பை மறுசுழற்சி இல்லை

குப்பை மறுசுழற்சி இல்லை, மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்படுவதில்லை. சட்டத்தை ஃபாலோ செய்யவேண்டும். குப்பைகளை இன்று முதலாவது மறுசுழற்சி செய்யுங்கள். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். எல்லா குப்பையும் ஒன்றாகதான் போகிறது.

சட்டமீறல்

சட்டமீறல்

தமிழ்நாட்டுல ரீசைக்கிளிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமீறலை பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். ஆனால் சட்டத்தை பின்பற்றவேண்டும்.

ஈக்கள் தொல்லை

ஈக்கள் தொல்லை

பிக்பாஸ் வீட்டில் ஈ, கொசு தொல்லை தாங்க முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து ஆயிரம் ஈ அடித்த அபூர்வ கஸ்தூரியாகதான் வெளியே வந்திருக்கிறேன். அந்தளவுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் ஈ தொல்லை அதிகமாக இருக்கிறது.

ஈக்கள் தான் உண்மை

ஈக்கள் தான் உண்மை

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் புற்கள் கூட உண்மையில்லை. எல்லாமே ஃபேக்தான். ஈக்கள் மட்டும்தான் உண்மையாக இருக்கின்றன. ஈக்களால் பலருக்கு உடம்புக்கு சரியில்லாமல் போகிறது. அதற்கு முடிவு கட்டுங்கள். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X