நடிகை கஸ்தூரிக்கு பாலியல் தொல்லையா.. யார் அந்த பிளாக் ஷீப்.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: சினிமாத்துறையில் தானும் பாலியல் தொல்லைகளை சந்தித்திருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகையான பயல் கோஷ் பாலியல் புகார் கூறினார்.

தன்னிடம் பேச வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்த அனுராக் சோஃபாவில் அமர்ந்திருந்த தன் மீது வலுக்கட்டாயமாக படுத்ததாக கூறினார்.

இயக்குநருக்கு ஆதரவு

இயக்குநருக்கு ஆதரவு

நடிகை பயல் கோஷின் இந்த புகார் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அனுராக் காஷ்யப் அவை ஆதாரமற்றது என்றார். அனுராக் காஷ்யப் ஆதரவாக அவரது முதல் மனைவியான ஆர்த்தி பஜாஜ், நடிகை டாப்ஸி மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

அதே நேரத்தில் நடிகை கங்கனா ரனாவத், இந்த புகாருக்கு அனுராக் காஷ்யப் தகுதியானவர்தான் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப் மீது போலீஸில் பயல் கோஷ் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் தேவை

ஆதாரம் தேவை

இந்நிலையில் நடிகை பயல் கோஷ் விவகாரம் தொடர்பாக டிவிட்டினார் நடிகை கஸ்தூரி. அதில், "நடிகை பயல் கோஷ் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சட்ட பார்வை: உறுதியான அல்லது உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் அவை ஒன்று அல்லது தொடர்பில் அனைத்து பெயர்களையும் அழிக்கக்கூடும்.. என்று பதிவிட்டிருந்தார்.

எனக்கும் நடந்துள்ளது

எனக்கும் நடந்துள்ளது

அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் உங்களுக்கு வேண்டிய ஒருவருக்கு இப்படி நடந்திருந்தாலும் இப்படிதான் ரியாக்ட் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். அதாவது எனக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன, எனக்கே நடந்துள்ளது. சினிமாத்துறையில் எனக்கும் மூடிய கதவுகளுக்கு பின்னால் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

என் தனிப்பட்ட பார்வை

என் தனிப்பட்ட பார்வை

மேலும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் முழு அனுதாபம் உண்டு. ஆனால் எனது தனிப்பட்ட பார்வை சட்டம் அல்ல. போலி குற்றச்சாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் சட்டத்தின் சரியான செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே ஆதாரங்களை நம்பியிருக்க வேண்டும்" என்றும் கஸ்தூரி கூறினார்.

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

MeToo இயக்கம் பற்றி பேசிய கஸ்தூரி, "#metoo இயக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டவிரோத ஆறுதலை அளித்துள்ளது. பல நாடுகளில், #metoo கடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், வருத்தத்தைத் தவிர வேறு எதுவும் வெளியே வரவில்லை. "நீதி மேலோங்கும், உண்மை வெற்றிபெறும் என்று நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X