நித்தியானந்தாவின் ஹேர் ஸ்டைலுக்கு நான் பெரிய ஃபேன் ஆயிட்டேன்.. நடிகை கஸ்தூரி அதகளம்!

சென்னை: நித்தியானந்தாவின் ஹேர்ஸ்டைலுக்கு தான் பெரிய ஃபேன் ஆகிவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vanitha VijayKumar செய்யும் சூழ்ச்சி • கலங்கும் குடும்பம்

பாலியல் குற்றச்சாட்டுகள், ஆள் கடத்தல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. இவர்
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார்.

அடிக்கடி ஆன்லைனில் நேரலையில் தோன்றி பேசி வருகிறார் நித்தியானந்தா. நக்கலும் நைய்யாண்டியுமாக இவர் பேசும் வீடியோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

கைலாசா கரன்சிகள்

கைலாசா கரன்சிகள்

விநாயகர் சதுர்த்தி நாளான கடந்த சனிக்கிழமை கைலாசா நாட்டுக்கு என்று தனி கரன்சிகள் என கால் காசு முதல் 10 காசு வரையிலான 5 வகையான நாணயங்களை நித்தியானந்தா அறிமுகப்படுத்தினார். அதோடு உலகம் முழுவதும் உள்ள இந்து நாடுகளுடன் வர்த்தக உறவு மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

வைரலான கடிதம்

வைரலான கடிதம்

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரையை சேர்ந்த ஹோட்டல் நிறுவனர் ஒருவர் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

முன்னுரிமை அளிக்கப்படும்

முன்னுரிமை அளிக்கப்படும்

இந்நிலையில் நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா, தன்னுடைய நாட்டில் தொழில் தொடங்க திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கஸ்தூரி

கஸ்தூரி

நித்தியானந்தா தான் தோன்றும் ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு புது ஹேர் ஸ்டைலில் உள்ளார். லூஸ் ஹேர், அள்ளி முடித்த கொண்டை, பின்னல் என பல லுக்குக்களில் தோன்றி வருகிறார். அதேபோல் அவர் அணிந்திருக்கும் ஆபரணங்களும் வீடியோவுக்கு வீடியோ மாறி வருகிறது.

ஃபேன் ஆயிட்டேன்

ஃபேன் ஆயிட்டேன்

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் நித்தியானந்தா குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது தான் நித்தியானந்தாவின் ஹேர் ஸ்டைலுக்கு பெரிய ஃபேன் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான லுக்கில் கலக்குறாரே என்றும் டிவிட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

தங்கசுரங்கம்

தங்கசுரங்கம்

அதனை பார்த்த நெட்டிசன்கள், நித்தியானந்தா உடம்பு முழுக்க தங்க முலாம் பூசியதை கவனிக்கவில்லையா? கைலாசா நாட்டில் தங்கச்சுரங்கம் இருக்கு போல என கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் போறப் போக்கில் கைலாசா நாட்டிற்கே சென்று விடலாம் என்று தோன்றுகிறது எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X