என் அனுபவம்.. வனிதா மேடம் சொன்னதுல பொய்தான் அதிகம்.. அவருக்கு அந்த வியாதி.. வெளுத்துவாங்கிய கஸ்தூரி!
சென்னை: தன்னுடைய அனுபவத்தில் நடிகை வனிதா சொன்னதில் பொய்தான் அதிகம் என நேரடியாக விளாசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
Recommended Video
நடிகை வனிதவின் மூன்றாவது திருமண விவகாரம் பூதாகரமாகியுள்ளது. வனிதா திருமணம் செய்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸில் புகார் அளித்தார்.
இதனால் எலிசபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களை உண்டு இல்லை என செய்து வருகிறார் வனிதா. அந்த வகையில் திரை பிரபலங்களான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் ஆகியோரை கடுமையாக விளாசினார்.

மன்னிப்பு கேட்டார்
வனிதாவுக்கு அவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டிவிட்டர் வலைதளம் கடந்த சில நாட்களாக ரணகளமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டிவிட்டிய வனிதா, தன்னைப் பற்றி பேசியதற்காக நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார்.

திடீர் பல்டி
மேலும் நாஞ்சில் விஜயன் ஷேர் செய்த தன்னுடைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவதாக தெரிவித்ததாகவும் டிவிட்டினார் வனிதா. இதனை பார்த்த நெட்டிசன்கள், நாஞ்சில் விஜயனின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்ன என கேட்டு வந்தனர்.

நான் மன்னிப்பு கேட்கல
இந்நிலையில் இன்று அதற்கு விளக்கமளித்த நாஞ்சில் விஜயன், தான் வனிதாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை என்றார். மேலும் ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால், பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள் என்று என்று எச்சரித்திருந்தார்.

பொய்தான் அதிகம்
இதனை நடிகை கஸ்தூரி ரீடிவிட் செய்திருந்தார். மேலும் நாஞ்சில் விஜயனின் டிவிட்டுக்கு பதில் கூறிய கஸ்தூரி, தன்னுடைய அனுபவத்தில் வனிதா மேடம் சொன்னதில் போய் தான் அதிகம் என்றும் அது அவருக்கு பொய் சொல்லும் நோய் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த டிவிட்டை வனிதாவுக்கும் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











