Vijay: விஜய் வாய்க்கு சர்க்கரை போடுவேன்..பரபரப்பில் மூக்கை நுழைத்த நடிகை கஸ்தூரி.. விபரம்!
சென்னை: அரசியல் தளத்திலும் சரி, சினிமா தளத்திலும் சரி, தமிழ்நாடு அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, விஜய், விசிக விவகாரம்தான். அம்பேத்கர் நினைவு நாளில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்த புத்தகாமான, “ எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. முதலில் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இறுதியில், விசிக தலைவர் திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழா, அரசியலாக்கப்படுகின்றது என்பதாகக் கூறி, விலகினார்.
புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதர் அர்ஜுனா பேசியதுதான் அரசியல் தளத்திலும் சினிமா தளத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக விஜய் பேசுகையில், “ அம்பேத்கரின் அவர்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் அழுத்தம் கொடுத்திருப்பதை என்னால் உணர முடிகின்றது. திருமாவாளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது மனம் முழுவதும் இங்குதான் இருக்கும்” எனக் குறிப்பிட்டார். விஜய்யின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிவிட்டது.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது கருத்தினைத் தெரிவிக்கையில், விஜய்யின் மனம் மேடையில் இல்லாமல் என்மீது இருந்திருக்கின்றது. மேலும், ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி, அந்த நெருக்கடிக்கு இணங்கும் அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை” எனவும் பதில் அளித்தார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, “ சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை” என ஒற்றை வரியில் பதில் அளித்தார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

விஜய் முயற்சி? : இப்படியான நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து பல அரசியல் விமர்சகர்கள் தொடங்கி, சினிமா ஆர்வலர்கள், சினிமா பத்திரிகையாளர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் பேசி வருகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, விஜய் தரப்பில் இருந்து, எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திருமாவளவனின் விசிக கட்சியை தங்களது கூட்டணியில் சேர்த்துவிட பல கட்ட முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஒரு பேச்சு அரசியல் தளத்தில் இருக்கின்றது.

கஸ்தூரி: இப்படியான நிலையில் நடிகை கஸ்தூரி பரபரப்பான விஷயமாக மாறியுள்ள விஜய் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ஆட்சியில் உள்ள திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் கூறியது நடந்தால் அவரது வாய்க்கு சர்க்கரை போடுவேன்” எனக் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

வழக்கு: நடிகை கஸ்தூரி அண்மையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறான மற்றும் உண்மைக்கு மாறான கருத்தைப் பேசியதால், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். தொடக்கத்தில், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும், இவர் ஹைதராபாத்திற்குச் சென்று, தலைமறைவாக தங்கியிருந்தார். சில நாட்கள் இவரைத் தேடி வந்த தமிழ்நாடு காவல்துறை இவரைக் கைது செய்தது. அதன் பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











