பிரபல நடிகர் மரணம்.. வார்த்தையே வரல.. கடவுளே.. நடிகை கஸ்தூரி அதிர்ச்சி!

சென்னை: கன்னட திரைத்துறையில் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து நடிகை கஸ்தூரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Chirenjeevi Sarja -விற்கு நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல் | Arjun Sarja, Meghna Raj

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் நடிகர் அர்ஜூனின் சகோதரி மகன் ஆவார்.

சிரஞ்சீவி சர்ஜாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகை மேக்னா ராஜ் உடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி குழந்தையை எதிர்பார்த்திருந்ததாக தெரிகிறது.

39 வயது..

39 வயது..

39 வயதான சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களின் படப்பிடிப்புகள் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு பிறகு இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

திடீர் மரணம்..

திடீர் மரணம்..

இந்நிலையில் நேற்று இவருக்கு கடுமையானநெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயா நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கார்டியாக் அரெஸ்ட்டால் அவர் உயிர் பிரிந்தது.

பிரலபங்கள் அதிர்ச்சி

பிரலபங்கள் அதிர்ச்சி

அவரது திடீர் மரணம் கன்னடம் திரைத்துறையை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சினிமாத் துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் கொடூரமானது..

மிகவும் கொடூரமானது..

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் குறித்து டிவிட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்ன என்ன!!? என்ன?? வார்த்தைகளை தாண்டிய அதிர்ச்சி.. சிரஞ்சீவி சர்ஜாவை போன்ற ஒருவர் எப்படி மரணிப்பார்? 39 வயதுதான் கடவுளே.. மேக்னா எதிர்பார்க்கிறார்.. இது மிகவும் கொடூரமானது.. என பதிவிட்டுள்ளார்.

லேசான நெஞ்சுவலி..

லேசான நெஞ்சுவலி..

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்வே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், முதலுதவியுடன் விட்டு விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்துள்ளது.

சேதுராமன் மரணம்

சேதுராமன் மரணம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சேதுராமன் திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். தோல் சிகிச்சை நிபுணரான இவரது திடீர் மரணமும் திரைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X