கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா?.. இப்படிக் கேட்பது நடிகை கஸ்தூரி!
அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே டிவிட்டரில் கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது.
சென்னை : டிவிட்டரில் தன்னைப் பற்றி கேவலமாக பேசிய ஒருவருக்கு பதிலடி தரும் விதமாக, அஜித் ரசிகர்கள் குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி தனது டிவீட்டுகளால் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நடிகை கஸ்தூரி. தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசுபவர்களுக்கு உடனுக்குடன் அவர் பதிலடி கொடுத்து வருகிறார். ஆனால், சம்பந்தப்பட்ட நபரை பற்றி மட்டும் பேசாமல், கூடுதலான வார்த்தைகளால் அவர் பிரச்சினைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் தல என்ற வார்த்தையுடன் தன் பெயரை வைத்திருந்த ரசிகர், கஸ்தூரியின் பதிவுக்கு ஆபாசமாக கமெண்ட் தெரிவித்திருந்தார். அப்போது, சம்பந்தப்பட்ட அந்த நபரை மட்டும் திட்டாமல், அஜித் ரசிகர்கள் அனைவரையும் குறிப்பிட்டு கஸ்தூரி வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் அதே போன்ற பதிவு ஒன்றால் அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் கஸ்தூரி.

கஸ்தூரி பதிலடி:
செயற்கைக்கோள் பற்றி கஸ்தூரி வெளியிட்ட பதிவு ஒன்றிற்கு, சம்பந்தமே இல்லாமல் ரசிகர் ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளால் பதில் வெளியிட்டிருந்தார். கூடவே அதில் அவர் அஜித் பேரையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த கஸ்தூரி, வழக்கம்போல சம்பந்தப்பட்ட அந்த நபரை பற்றி மட்டும் பேசாமல், மீண்டும் அஜித் ரசிகர்கள் அனைவரையும் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கஸ்தூரி கேள்வி:
இது தொடர்பான பதிவில் அவர், "செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் 'தல' பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா?" எனக் கேட்டுள்ளார்.

கோபம்:
இந்தப் பதிவை வெளியிட்டது நிஜமாகவே ஒரு அஜித் ரசிகர் தானா என்று தெரியவில்லை. ஆனால், உண்மையை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் பேசியதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொச்சைபடுத்துவது சரிதானா? என அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை கண்டித்து கோபமாக கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.
இது தேவையா?
இது போன்ற எந்த சர்ச்சைகளிலும் சிக்கக் கூடாது என்றுதான் அஜித் எந்த சமூகவலைதளப் பக்கத்திலும் இல்லை. ஆனாலும், ஏன் தேவையில்லாமல் அவரைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என இந்த ரசிகர்கள் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











