அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.. பொண்ணு வேணும்னா.. நடிகை செம கோபம்!
Recommended Video
சென்னை: தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய அஜித் ரசிகர்களை நடிகை கஸ்தூரி லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார். அதேபோல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கவின் ரசிகர்களால் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டார். இருப்பினும் தன்னைப்பற்றி கருத்து கூறுபவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து வருகிறார்.

தரக்குறைவான கருத்து
இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரியை வம்பிழுத்துள்ளனர். கஸ்தூரி குறித்து மிகவும் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஷேர் செய்த கஸ்தூரி
இதனை பார்த்த கஸ்தூரி அவர்கள் தன்னைப் பற்றி பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

ரிப்பேர் ஆக்காதீங்க
அதோடு அவர்களுக்கும் நச் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க.. என்று பதிவிட்டிருக்கிறார்.

திட்டுவது தவறு
கஸ்தூரியின் இந்த ட்வீட்டால் அஜித் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக மொத்த அஜித் ரசிகர்களையும் திட்டுவது தவறு என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
அம்மா சொல்லி தரலையா?
அதேநேரத்தில் கஸ்தூரியின் இந்த டிவீட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு நல்ல மனிதரோட ஃபோட்டோ வைத்து இப்படி கேவலமா நடத்துகிறீர்களே உங்களுக்கு வெட்கமா இல்லையாடா, ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்று உங்க அம்மா சொல்லி கொடுக்கவில்லையா? தயவு செய்து அஜித் சார் போட்டோவ எடுங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
டிபியில் போட்டோ
டிபியில் அஜித் புகைப்படம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அஜித் ஃபேன்ஸ் இல்லை. அவ்வாறு பேசியது மிகவும் தவறானது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கு #dirtyAjithFans என பதிவிட்டு இருப்பதும் தவறு தான். நாளை ஒருவன் உங்க போட்டோவை டிபியில் வைத்து தவறாக பேசினால் கூட #dirtyKasthuriFans என பதிவிடுவீர்களா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











