For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலா என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா? நான் இருந்திருந்தா கொலை விழுந்திருக்கும்.. கஸ்தூரி ஆவேசம்!

  |

  சென்னை: பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் பாலாஜி என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா என கிழித்து தொங்கவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

  பாலாவிற்கு மட்டும் தனி சலுகைகள், கமல் காட்டம் | Bigg boss 4 Tamil

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

  சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் அழகிப் போன்று என்று கூறினார். அப்போது அவரை அட்ஜெஸ் ட்மென்ட் செய்துதான் அழகிப் பட்டத்தை வாங்கியதாக கூறியுள்ளார்.

  சனம் புகார் மனு

  சனம் புகார் மனு

  இந்த விஷயத்தை கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த கோர்ட் டாஸ்க்கில் வெளிப்படுத்தினார் நடிகை சனம் ஷெட்டி. தனது புகார் மனுவில் நடிகை சனம் ஷெட்டி அதனை எழுதியிருந்தார். சனம் எழுதியதை புரமோவில் காட்டியது விஜய் டிவி.

  கொதித்த பிரபலங்கள்

  கொதித்த பிரபலங்கள்

  அந்த விஷயம் சர்ச்சையாகவும் புரமோவை நீக்கியது. ஆனாலும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைரலாக்கினர் நெட்டிசன்கள். இதனை பார்த்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் கொதித்தனர். ஒரு பெண்ணை கேவலமாக பேசிய பாலாவை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  டார்கெட் செய்கிறார்கள்

  டார்கெட் செய்கிறார்கள்

  இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி எவிக்ட்டாக வேண்டும். சனம் ஷெட்டியை எனக்கு பிடிக்கும். அவரை எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள்.

  சொந்த நன்மைக்காக

  சொந்த நன்மைக்காக

  அவருடைய சொந்த நன்மைக்காக அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும். ஏற்கனவே பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பாலா, சுச்சி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட எல்லோருமே சனம் ஷெட்டியை டார்கெட் செய்கிறார்கள்.

  கொலை விழுந்திருக்கும்

  கொலை விழுந்திருக்கும்

  சில விஷயங்களில் சனம் ஏன் இவ்ளோ ஹைப்பர் ஆகிறார்? ஓவர் ரியாக்ட் செய்கிறார் என்று தோன்றும். இவ்ளோ கேடு கெட்ட விஷயங்கள் நடக்கும்போது அப்படிதான் நடந்துகொள்ள முடியும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் கொலை விழுந்திருக்கும்.

  கமல் சாருக்கு நல்லது

  கமல் சாருக்கு நல்லது

  உடலே சிலர் கேட்கலாம் போன சீசன்ல நான் என்ன கிழிச்சேன் என்பது எனக்கும் தெரியும், விஜய் டிவிக்கும் தெரியும், ஏன் வனிதாவுக்கு கூட தெரியும். மக்களுக்குதான் தெரியவில்லை. பாலாவை வெளியேற்ற வேண்டும். அதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அதனை தொகுத்து வழங்கும் கமல் சாருக்கும் நல்லது.

  குறும்படம் போடுங்கள்

  குறும்படம் போடுங்கள்

  பாலா அட்ஜெஸ்ட்மென்ட் காம்ப்ரமைஸ் பற்றி பேசியது கமலுக்கும் தெரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.பாலா அந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மைதான என்பதை குறும்படம் போட்டு மக்களுக்கு காட்ட வேண்டும். அவரே ஒரு மாடல்.. அப்படி இருந்துகொண்டு மற்றொரு மாடலை கன்னாபின்னாவென தவறாக பேசலாமா?

  அரிச்சந்திரனின் பேரனா?

  அரிச்சந்திரனின் பேரனா?

  பாலா என்ன அரிச்சந்திரனின் பேரனா? அவர் தப்பே பண்ணியதில்லையா? பொய்யே சொன்னதில்லையா? சிம்பத்தி டாப்பிக்கில் அப்பா அம்மாவை குடிகாரர்கள் என்றார். நான் ஒரு அனாதை, ஆணழகன் பட்டம் வென்று திரும்பிய போது யாரும் என்னை வரவேற்கவில்லை என்று கண்ணீர் விட்டார்.

  இதான் ஸ்ட்ராட்டஜியா?

  இதான் ஸ்ட்ராட்டஜியா?

  ஆனால் அதே நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பிறகு, ஆணழகன் பட்டம் வென்ற தனக்கு ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரை மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். என் அம்மா ஆரத்தி எல்லாம் எடுத்தார் என்றார். இதான்
  ஸ்ட்ராட்டஜியா? பொய் சொல்லி ஏமாத்தி விளையாடுறதுதான் ஸ்ட்ராட்டஜியா?

  மன்னிப்பு கேட்கனும்

  மன்னிப்பு கேட்கனும்

  அவரை ஹீரோவே காட்றீங்க.. நடிச்சு நம்ப வைக்கிறது விளையாட்டா. அவரை உடனே வெளியேற்ற வேண்டும்.
  பொய் சொல்றது பொம்பளைங்கள தப்பா பேசுறதெல்லாம் விளையாட்டல்ல. அவர் பேசியதற்கு சனம்கிட்ட மட்டுமில்ல மக்கள் கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார் கஸ்தூரி.

  English summary
  Actress Kasthuri slams Balaji in Biggboss house. She Wants To send Balaji out from the biggboss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X