இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா? ரசிகர்களின் செயலால் கோபமான நடிகை!
Recommended Video
சென்னை: விஜயின் பிகில் படம் திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள் கடைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் பிகில். இந்தப் படம் பெரும் சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே நேற்று வெளியானது.
படம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சிலர் படம் அட்டகாசம் என்றும் சிலர் கொலை என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடைகள் சூறை
இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திரையரங்கம் அருகே இருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.

வைரல் காட்சிகள்
கடைகளின் போர்டுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் என எதையும் விட்டு வைக்காமல் சூறையாடினர் விஜயின் ரசிகர்கள். பதைபதைக்க வைக்கும் அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

எதிர்காலமா?
இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி ரசிகர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காட்டமாகவும் டிவிட்டியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, ஒரு பெண் கூட இல்லை, குழந்தைகளும் வயதான நபர்களும் காணப்படவில்லை. கடைகளை அழித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். இவர்கள்தான் தமிழகத்தின் எதிர்காலமா?
பதறிய நடிகை
விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ. எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா? அய்யோ என பதறிப்போய் டிவிட்டியிருக்கிறார் கஸ்தூரி.
இப்போதே பயிற்சி
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருப்பதாவது, பயிற்சி பெறுகிறார்கள் போல..வேறென்ன சொல்ல..படம் திரையிட தாமதம் என்பது ஓர் காரணமாம்..நல்ல நாகரீகம்.. அவர்களின் பெற்றோர் பெருமைப்படட்டும்..இதற்கு சமூக அக்கறை என்று சொம்பு தூக்க விவாதங்கள் வேறே.. என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











