Exclusive: "நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான"... அரைவேக்காடுகள் பற்றி கஸ்தூரி பொளேர்!

தன்னைப் பற்றி இழிவாக கமெண்ட் போடுபவர்கள் பற்றி விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சென்னை: பட கதாபாத்திரத்தோடு, தனது நிஜ கதாபாத்திரத்தை இணைத்து பேசுபவர்களை அரைவேக்காடுகள் என விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சமூகவலைதளங்களில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் திரை பிரபலங்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். எந்த விசயமாக இருந்தாலும், அது தொடர்பாக மனதில் பட்டதை அப்படியே பதிவு செய்வதால் பல சமயங்களில் அவர் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

பல நேரங்களில் நெட்டிசன்களுக்கும் அவருக்கும் இடையே வார்த்தைப் போரே நடப்பதுண்டு. அப்போது தரக்குறைவான பதிவுகளை சிலர் வெளியிடுவதுண்டு.

அதுகுறித்து, நடிகை கஸ்தூரியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

பாராட்டு:

பாராட்டு:

நான் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன். டிவிட்டரிலும் அப்படித்தான். இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் சரியாகப் பேசினீர்கள் என போன் செய்துகூட பாராட்டுவதுண்டு.

வீட்டிலும் அப்படித்தான்:

வீட்டிலும் அப்படித்தான்:

நியாயமான விஷயங்களுக்கு நான் குரல் கொடுப்பேன். வீட்டிலும் நான் அப்படி தான். நான் ஏதாவது கமெண்ட் போட்டால், உடனே 'இவ நடிகை தான. இவளுக்கு என்ன தெரியும்' என கேட்பார்கள்.

அல்வா விவகாரம்:

அல்வா விவகாரம்:

சிலர், "நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான" என்பார்கள். அதை பார்க்கும் போது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் சிரிப்பு தான் வரும். எவ்வளவு அரைவேக்காட்டு தனமான பேச்சு அது. அப்படத்தில் நடிக்க தயாரிப்பாளரிடம் சம்பளம் தான் வாங்கினேன், அல்வா யாராவது வாங்குவார்களா?" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இ பி கோ 302:

இ பி கோ 302:

கஸ்தூரி தற்போது சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளன. இந்தப் படத்திற்குப் பிறகு மென்மையான நடிகை என்ற இமேஜ் மாறும் என நம்பிக்கையாக இருக்கிறார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X