வாய கௌறீங்க.. பிக்பாஸ், கமல், கவின் என அனைவரையும் விளாசி தள்ளிய கஸ்தூரி!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kasthuri oppose kamal comments

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி தனது பேட்டியில் கவின், பிக்பாஸ், கமல் என அனைவரையும் விளாசி தள்ளியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் கஸ்தூரி. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கஸ்தூரி, தற்போது விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து கஸ்தூரி பேசியுள்ளார்.

முதுகெலும்பு இல்லாதவர்கள்

முதுகெலும்பு இல்லாதவர்கள்

அப்போது, கவின் தனக்கு பின்னால் பேசியது குறித்தும் கிண்டல் செய்தது குறித்தும் கருத்து தெரிவித்த கஸ்தூரி, எனக்கு பின்னால் பேசியவர்கள் முன்னால் பேச துப்பில்லாதவர்கள், முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இல்லாதவர்கள் என கடுமையாக சாடினார்.

சரியாக பேசவில்லை

சரியாக பேசவில்லை

மேலும் மதுமிதா விவகாரத்தில் நியாயம் மனசாட்சிப்படி யாரும் நடந்துகொள்ளவில்லை என்றும், தனக்கு சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை, அந்த சம்பவம் குறித்து பேச தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதாலும் அதுகுறித்து தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் கூறினார் கஸ்தூரி.

சேரன் மட்டும்தான்

சேரன் மட்டும்தான்

மதுமிதா விவகாரத்தில் பிரச்சனை யாரால் ஆரம்பித்தது. பிரச்சனைக்கு காரணம் யார் என்பதெல்லாம் காட்டப்படவில்லை என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பிரச்சனையின் போது மனுஷத் தன்மை என்பது சேரன் சார்க்கிட்ட இருக்கு என்றும் கஸ்தூரிக்கிட்ட இருந்துச்சு என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின் முகம்

நிகழ்ச்சியின் முகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரின் உண்மை முகமும் தெரியவரும் என்று கூறுகிறார்கள். ஆனால் மதுமிதா விவகாரத்தின் போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மை முகம் எனக்கு தெரிந்தது.

காதலும் சண்டையும்தான் தேவை

காதலும் சண்டையும்தான் தேவை

நான் ஏன் பேசவில்லை என்கிறார்கள், நான் அரசியல் பேசினேன், பெண்ணியம் குறித்து பேசினேன் அபி பிரச்சனையின் போது பெரிதும் குரல் கொடுத்தேன், ஆனால் நான் பேசிய எதையுமே அவர்கள் காட்டவில்லை. கமல் சாரும் நீங்கள் ஏன் உள்ளே பேசவே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு காதலும் சண்டையும் தான் தேவை.

ஆட்டி வைக்கும் பிக்பாஸ்

ஆட்டி வைக்கும் பிக்பாஸ்

ஹவுஸ்மேட்ஸ்கள் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் போல்தான் இருக்கின்றனர். அவர்களை ஆட்டி வைப்பது பிக்பாஸ்தான். மக்களுக்கு இதுதான் தேவை என முடிவு செய்து பிக்பாஸ் சிலவற்றை மட்டுமே காட்டுகிறார். பிக்பாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கொடுக்க நினைக்கிறார் என்று தெரியவில்லை.

வாயை கிளறீங்க

வாயை கிளறீங்க

பிக்பாஸ் வீட்டில் மனிதராகவும் மனித தன்மையுடனும் நடந்து கொள்வது சேரன் மட்டும்தான். மற்றவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. மதுமிதா பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரினும் லாஸ்லியாவும்தான். முக்கியமாக சம்பந்தப்பட்டவர் ஷெரின்தான். நீங்கள் மீண்டும் மீண்டும் என் வாயை கிளறீங்க. நான் பேசியதை நீங்க காட்டவில்லை.

என்ன தப்பு?

என்ன தப்பு?

சேரன் சார் பாசமான மனிதார், லாஸ்லியாவுக்கும் பாசம் இருந்துச்சு. தற்போது லாஸ்லியாவுக்கு பாசத்தைவிட நட்புதான் முக்கியமாக படுகிறது. சேரனுக்கு இயக்குநர் என்ற ஈகோ இருந்தால் என்ன தப்பு? சிலர் எதுவுமே செய்யாமல் ஈகோ பார்க்கும் போது சேரன் பார்த்தால் என்ன தப்பு?

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

வனிதாவும் சாண்டியும் அரிச்சந்திரன், மகாத்மா காந்தி எனக்கு பின்னால் பேசுவதற்கு நான் விளக்கம் அளிக்க முடியாது. வனிதா தனி உலகத்தில் வாழ்கிறார். வனிதா சமைக்கும்போதே எச்சில் பண்ணுவார். பிக்பாஸ் வீட்டில் அடிப்படை சுத்தம் என்பது இல்லை என கூறினார். மொத்தத்தில் பிக்பாஸ் மீது கஸ்தூரி அதிருப்தியில் உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X