வெள்ளி தட்டில் கொக்கைனா?.. கமல் பற்றி சுசித்ரா சொல்றது நம்புற மாதிரியா இருக்கு?.. கஸ்தூரி ஓபன் டாக்

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். முக்கியமாக கமல் ஹாசன் குறித்தும் ஒரு விஷயத்தை பேசி பரபரப்பை பற்ற வைத்தார். அது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kamal Haasan Suchitra Kasthuri

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.

சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.

திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

கமல் பற்றி சுசித்ரா: தனுஷ், திரிஷா என சகட்டுமேனிக்கு பிரபலங்கள் பற்றி புகார் பத்திரம் வாசித்த சுசித்ரா கமல் ஹாசனையும் விட்டுவைக்கவில்லை. ஒரு பேட்டியில் கமல் பற்றி பேசிய அவர், 'கமல் ஹாசனின் பர்த்டே பார்ட்டி கிராண்டாக நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு வெள்ளி தட்டில் வைத்துதான் கொக்கைன் போதை பொருளை கொடுப்பார்கள்’ என்று குறிப்பிட்டார். இது பெரும் அதிர்ச்சியை தமிழ் திரையுலகில் ஏற்படுத்தியது.

கஸ்தூரி பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய கஸ்தூரி, 'கமல் ஹாசன் பற்றி சுசித்ரா சொல்வதையெல்லாம் பார்க்கும்போது நம்பும்படியாகவா இருக்கிறது. கமல் சார் 6 வயதிலிருந்து நடித்துக்கொண்டிருக்கிறார். திரை ஆளுமையாக மட்டுமில்லாமல் அரசியல் ஆளுமையாகவும் அவர் இப்போது இருக்கிறார். அவருடன் நான் வேலையும் செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் எல்லாம் இல்லை கமல். நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன்.

நைட் முழுக்க பார்ட்டி செய்துவிட்டு அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த நடிகையையும் எனக்கு தெரியும். குடித்துவிட்டு பாடல் கொடுக்காமல் படத்தை நிற்க வைத்த இசையமைப்பாளரையும் தெரியும். எல்லோரும் அப்படி கிடையாது. ஆறு வயதிலிருந்து நடித்துக்கொண்டிருப்பவர். தினந்தோறும் பொதுமக்களின் பார்வையிலேயே வளர்ந்த மனிதர் கமல் ஹாசன். அவர் என்ன செய்தாலும் வெளியே தெரியாமல் இருக்காது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X